கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

ஈகை பற்றிப் பேசிய

ஒருவரின் நயமான சொற்களில் மயங்கினான் இளைஞன். முடிந்தவரை தருமம் செய்ய முடிவெடுத்தான். ஒரு நாள் கடைவீதியில், பசியால் வாடிய கிழவி கையேந்தி நிற்க அந்தப் பேச்சாளர் கண்டு கொள்ளாமல் நகர்ந்தது கண்டு அதிர்ந்தான். தந்தையிடம் முறையிட்டான். அவர் சொன்னார், “வாழ்க்கையின் பாடங்கள் பலவிதமாய் வந்தடையும். “அவர் பேச்சு சூத்திரம். அதை உன் வாழ்வில் பயன்படுத்துவது உனக்கு நல்லது. அவர் என்ன செய்கிறார் என்ற கவலை உனக்கெதற்கு?” போதகர்களின் பொய்மை கண்டு போதனையை விட வேண்டாம்.

2 Responses

  1. nkk baburaj

    கொஞ்ச நாள் இந்த நித்தியானந்த அறிவுரைகளை கேட்டு சும்மா இருக்கம எனக்கு தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து சென்று , உச்சகட்டம மனைவியை கூட அழைத்து கொண்டு தியானம் செய்ய அனுப்பி
    கடைசியா ஒரு பெரிய ஆப்பு வெச்சாரு. போறவன் வரவன் எல்லா கேள்வி கேட்கரணுக. பதில் சொல்ல முடியாம வாங்கின புத்தகம் சி டி எல்லாம் தூக்கி வீசிட்டேன். இந்த கான்ஃபிடன்ஸ் கார்னர் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது.. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *