அந்த காலம் இந்த மாதம்

ஜுன் 1
1980

சி.என்.என் நிறுவனம் இந்த நாளில் மாலை 6.00 மணியளவில் ஒளிபரப்பைத் தொடங்கியது – “உலகம் அழியும் வரை எங்கள் ஒளிபரப்பை நிறுத்த மாட்டோம். உலகம் அழிவதையும் ஒளிபரப்புவோம்” என்று சொன்னார், அதன் தலைவர் டெட்டெர்னர் பிலிக்.

ஜுன் 2
1896

வானொலியைக் கண்டுபிடித்ததற்கான அதிகார உரிமையை மார்க்கோனி பெயரில் பதிவு செய்து வழங்கியது பிரிட்டன் அரசு.

ஜுன் 3
1864

மிகக் குறைந்த பொருட்செலவில் ஓடக்கூடிய மோட்டார் வண்டியை உருவாக்கினார் ரென்ஸம் ஓல்ட்ஸ். ஜெர்மானியரான அவரது கண்டுபிடிப்பு “ஓல்ட்ஸ் மொபைல்” என்றழைக்கப்பட்டது.

ஜுன்10
1943

தன் அச்சகத்தில் பயன்படுத்திய மை மிக விரைவாக உலர்வதைக் கண்டு அவற்றைக் கொண்டு பால்பாயிண்ட் பேனாக்களை உருவாக்கினார் லாஸ்லோ பிரோ. தன் கண்டுபிடிப்புக்கான உரிமைப் பத்திரத்தை அந்த ஹங்கேரிய எழுத்தாளர் பதிவு செய்துகொண்ட நாள் இன்று.

ஜுன்16
1812

உலகப் போருக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, நியூயார்க்கில் 52, வால் ஸ்ட்ரீட் என்ற முகவரியில் தன் தலைமை அலுவலகத்தை இன்று துவக்கியது சிட்டிபாங்க்.

ஜுன்25
1985

தங்கள் போட்டி நிறுவனமாகிய ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸிற்கு, மெஷின்டோஷ் கம்ப்யூட்டருக்குத் தொழில் நுட்ப உரிமம் பெறுமாறு மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் இன்று கடிதம் எழுதியது. இந்த ஆலோசனையை ஆப்பிள் நிறுவனம் நிராகரித்தது. அதனாலேயே மைக்ரோ சாஃப்ட் ஆப்பிள் நிறுவனத்தை வென்றது. விசித்திரம்! ஆனால் உண்மை!!

ஜுன்27
1878

ஜப்பானின் கரன்சியாகிய “யென்” முதல் முதலாகப் புழக்கத்திற்கு வந்தது. இதே தேதியில் 1887ல் ஜப்பானிய வங்கி உருவாக்கப்பட்டது.

ஜுன்28
2000

லாரிவார்ட் புகையிலை நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான மார்ட்டின் ஒர்லாவஸ்கி, புகை பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் உருவாவதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். புகை பிடித்து நோயாளியானவர்களுக்கு நஷ்டஈடு தருவது தொடர்பான விசாரணையில் அவர் பதிலளித்தார்.

ஜுன்29
1620

ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கிறது என்ற காரணத்தால் பிரிட்டனில் புகையிலை வளர்ப்பதை முதலாம் ஜேம்ஸ் அரசர் இன்று தடை செய்தார்!!

ஜுன்30
1999

தன் வீட்டு உபயோகப் பொருட்களைப் பரிசோதிப்பதற்கு விலங்குகளைப் பயன்படுத்துவதில்லை என்று புரோக்டர் & கேம்பிள் நிறுவனம் அறிவித்தது. உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் மட்டும் விலங்குகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *