நமது பார்வை

இது பரவுக!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று இரவு. பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.எல்.கே.அத்வானி, பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வாழ்த்துத் தெரிவிக்க மட்டும் அல்ல! தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேச நேர்ந்தமைக்கு வருத்தம் தெரிவிக்கவும் தான்!!

தன்னுடைய தரப்பிலிருந்து வந்த தாக்குதல் வார்த்தைகளுக்காக மன்மோகன்சிங், அத்வானி அவர்களிடம் வருத்தம் தெரிவித்தார் என்றும் தெரிகிறது.
மூத்த தலைவர்களின் முதிர்ந்த பண்பாடு இந்த சம்பவத்தில் வெளிப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடுகள் – கட்சி வேறுபாடுகள் – கொள்கை வேறுபாடுகள் ஆகியன, தனிப்பட்ட பகைமையை வளர்க்கும் தளமாய் ஆக எந்த அவசியமும் இல்லை. இந்தப் படிப்பினையை இந்தியாவுக்கு உணர்த்திய இருவருமே பாராட்டுக்குரியவர்கள். அனைத்து இயக்கங்கள் மத்தியிலும் இந்தப் பண்பாடு பரவட்டும். மக்களுக்குத் தலைவர்கள் முன்மாதிரியாய்த்  திகழட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *