சாதனைச் சதுரங்கம்

முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள் எட்டு

முன்னேறும் எண்ணம் யாருக்குத் தானில்லை? எல்லோருக்குமே இருக்கிறது. பிறகேன் –  எல்லோராலும் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை எட்ட முடியவில்லை? – என்பது தான் நமது கவனத்தை ஈர்க்கும் கேள்வி. அதற்கு விடை காணுவதே நம் நோக்கம்.

“எது” நம்மிடமுள்ள போதாமை என இனம் கண்டுகொண்டால் அதனைப் போக்குவதற்கான முயற்சிகளையும் பயிற்சிகளையும் (Focused efforts) மேற்கொண்டு முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடலாம் என்பது என் உறுதியான எண்ணம்.

நம்மில் பலர், நமது முன்னேற்றத்திற்கான தடைகளை அறியாமலேயே
முனகிக் கொண்டிருக்கிறோம் என்பதே கசக்கும் உண்மை.

எட்டு முட்டுக்கட்டைகள் :

<!– /* Font Definitions */ @font-face {font-family:UNI-KS-Seeron; mso-font-alt:”Courier New”; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:1048579 0 0 0 1 0;} @font-face {font-family:”JF Aathi”; panose-1:0 0 0 0 0 0 0 0 0 0; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:3 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:””; margin:0in; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:”Times New Roman”; mso-fareast-font-family:”Times New Roman”;} @page Section1 {size:8.5in 11.0in; margin:1.0in 1.25in 1.0in 1.25in; mso-header-margin:.5in; mso-footer-margin:.5in; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} –>

முட்டுக்கட்டை

அகற்றும் முறை

முனைப்பின்மை : அதென்ன முனைப்பு? வேறொன்றுமில்லை. பிழைப்பு நடத்தினால் போதுமென்பவன் பிச்சையெடுக்கிறான். உயர நினைப்பவனோ ஓயாது உழைக்க முற்படுகிறான் உழைக்க முற்படுபவனே முன்னேறும் முனைப்புக் கொண்டவனாகிறான் அதாவது தன்னைப் பற்றிய நினைப்பு உயர்வாயிருப்பவன் முனைப்பு மிக்கவனாகக் கருதப்படுகிறான். தன்னைப் பற்றிய நினைப்பு தாழ்வாயிருப்பவன் முனைப்பற்றவனாய் தாழ்வு மனப்பான்மை கொண்டவனாய் இருக்கிறான். தாழ்வு மனப்பான்மை கொண்டவனை தன்னம்பிக்கையற்றவன் என்று கூறுவதே பொருந்தும். இது ஒரு பெருந்தடை

இந்த தடையைத் தகர்க்க தன்னம்பிக்கை மிகுந்தவர்களோடும் வெற்றியாளர்களோடும் பழக்கமேற்படுத்திக் கொள்ளவேண்டும். தன்னம்பிக்கை தரும் நூல்களை வாசிக்க வேண்டும். தன்னைப் பற்றிய பிம்பத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான எண்ணங்களை அடிக்கடி மனதில் பதியமிட வேண்டும். இந்த தடையைத் தகர்க்க தன்னம்பிக்கை மிகுந்தவர்களோடும் வெற்றியாளர்களோடும் பழக்கமேற்படுத்திக் கொள்ளவேண்டும். தன்னம்பிக்கை தரும் நூல்களை வாசிக்க வேண்டும். தன்னைப் பற்றிய பிம்பத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான எண்ணங்களை அடிக்கடி மனதில் பதியமிட வேண்டும்.

இலக்கின்மை : எதை அடைய வேண்டும்? நாம்எங்கு செல்கிறோம்? என்னும் தெளிவின்மை ஒரு முட்டுக்கட்டைல்லவா? மனித வடிவெடுத்த நான்- என்ன பாத்திரமாகப் பரிமளிக்க வேண்டும். எந்த வகையில் பயனளிக்க முடியும்? என்னும் தனது இலக்கினை – குறிக்கோளை குறித்துக் கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய முட்டுக்கட்டை. ஏனெனில் எங்கு செல்வது என்பதை அறியாதவரால் எப்படிப் பயணத்தை தொடங்க முடியும்? எப்படியோ தொடங்கி விட்டிருந்தாலும் அதை எப்படி தொடர முடியும்?

இந்த நிலையை மாற்ற, நமது ஆர்வத்தையும், தேவையையும் திறமையையும், அறிந்து அதற்கேற்ற குறிக்கோளைக் குறித்துக் கொள்ள வேண்டும். இதற்கான ஆலோசகர்களைக் கூட அணுகி தன் இலக்கைக் குறித்துக் கொள்ளலாம்.

குறித்துக் கொள்ளாத இலக்கை அடைய முடிவதில்லை என்பது வெற்றியாளர்களின் அனுபவமாகும்.

ஒன்றில் ஒன்றாமை : ஆமாம், நாம் பெரும்பாலான நேரங்களில் நமது கவனத்தைப் பல்வேறு வழிகளில் சிதறவிட்டு விடுகிறோம்.

எடுத்துக்கொண்ட இலக்கில் நிலை கொள்ளாமல் சின்னஞ்சிறு தூண்டில் களிலெல்லாம். சிக்கிச் சின்னாபின்னமாகிப் போகிறோம். இதனால் நம் சக்தி முழுமையும் ஒன்று சேராமல் அரைகுறையான ஆற்றலை மட்டுமே வெளிப்படுத்திச் சறுக்கலைச் சந்திக்கிறோம்.

ஒருநேரத்தில் நாம் எடுத்துக் கொண்ட ஒரு எண்ணத்தில் மனதை குவிக்க வேண்டும்.

ஒன்றில் ஒன்றும்போதுதான் முழு ஆற்றலும் வெளிப்படுகிறது. அதனால் வெற்றியும் இலகுவாகிறது. தொடர் தியானமும்-யோகமும் மனதை ஒருமுகப்படுத்து வதில் பெரும்பங்கு வகிக்கின்றன. மனதை ஒரு செயலில் குவித்தவர்கள் சாதனையாளர்களாகி இருக்கிறார்கள் என்பது வரலாறு

தொடங்கும் துணிவின்மை : நம்மில் பலர் நல்ல முடிவெடுத்த பின்னும் முதல் அடியெடுத்து வைக்க வெகுநாளாகும். காரணம் தயக்கம். இது சரியா? தவறா?… என்னும் தயக்கம்.

ஒருவேளை முயற்சி தோற்றுப் போனால்…? மற்றவர்கள் என்ன சொல்வார்கள்? என்னால் தொடர்ந்து செயலாற்ற முடியுமா? போன்ற தயக்கங்கள்.

அடுத்தது அச்சம்… இருப்பதையும் இழக்க நேர்ந்தால் எப்படி சமாளிப்பது என்னும் அச்சம்.

எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை-போன்ற பல்வேறு கவலைகளோடு தற்போதைய சமூகப் பொருளாதார நிலையும் சேர்ந்து கொண்டு ஒருவரை செயலற்றவராக்கிவிடுகிறது.

இந்த நிலை மாறவேண்டுமெனில் செய்யப்போகும் செயல் குறித்த சரியான தகவல்களை பெறவேண்டும்.

அந்தத் தொழிலின் முன்னோடிகளைச் சந்தித்து அதன் நுணுக்கங்களை ஆராய்ந்து அறிய வேண்டும்.

பொருளாதாரத்தையும், மனித வளத்தையும், காலத்தையும், இடத்தையும் தேர்ந்தெடுத்து முறையாகப் பயன்படுத்துவதற்கான கலையைக் கற்றுக் கொள்வதோடு-சரியாக திட்டமிடவும் வேண்டும்.

முடிவெடுத்தபின் – செயல் திட்டம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டு, துணிவாக தொடங்கிவிட வேண்டியதுதான். எண்ணியது ஈடேற வேண்டுமெனில் எண்ணித் துணிக!

தொடரும் வலிமை இன்மை : நம்மில் பலர் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் தொடர முடியாமல் தவிப்பார்கள். சிலரோ சில நாட்களிலேயே… தொடங்கியதைப் பாதியிலேயே விட்டுவிடுவார்கள். இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறமுடியும்.

1. வெல்லும் திறன் போதாமை 2. தாங்கும் வல்லமை இன்மை 3. பொறுமையின்மை.

வெல்லும் திறன் என்பது உரையாடும் கலை, தலைமைப்பண்பு மற்றும் செய்நேர்த்தி போன்ற பல கூறுகளை உள்ளடக்கிய தன்மையாகும். பேச தெரியாததாலும், நிலைமைக்குப் பொறுப்பேற்கும் குணம் இல்லாததாலும், செய்நேர்த்தியில் குறைபாடு இருப்பதாலும் சில தோல்விகளை சந்திக்க நேரும். அப்படி சிறுசிறு தோல்விகளைக் கூடச் சமாளிக்க முடியாமல் துவண்டு போகும் மனமுடையவர்கள் நாளடைவில் இடையிலேயே விட்டுவிடுவார்கள். எதிர்பார்ப்புகள் உடனடியாக நிறைவேறாதபோது எளிதில் ஏமாற்றத்தைத் தழுவுவார்கள். தாங்கும் ஆற்றலும், பொறுமையும் போதிய அளவு இல்லாமல் தொடரமுடியாமல் போனவர்கள் பலர்.

இலக்கு தெளிவாய் இருந்து அதை அடைந்தே தீருவது என்னும் திண்ணம் (மனஉறுதி) இருந்தால் இந்நிலையை வென்றுவிடலாம்.

எல்லாம் மாறும் – என்னும் நம்பிக்கையும், அடுத்தது என்ன செய்து பார்க்கலாம்?

என்னும் புதிய பார்வையும் பெற்றுவிட்டால் நிச்சயமாய் இந்நிலையைக் கடந்து விடலாம்.

சாதிக்கப் பிறந்த நமக்கு சோர்வு என்பது கூடவே கூடாது.

பிறர் மனம் புரியாமை : எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அறிவு வேறாய், அனுபவம் வேறாய், திறமை வேறாய், மனோபாவம் வேறாய், வேறாய், மதிப்பீடு நம்பிக்கை வேறாய், விருப்பம் வேறாய், வேதனை வேறாய், நாம் உலா வருகிறோம். என்னதான் இலக்கைக் குறித்தாலும், எப்படிப்பட்ட திட்டம் கைவசம் இருப்பினும், எவ்வளவு பொருள் வளம் இருப்பினும், எல்லாத்திறமையும் – கணிப்பொறியும் இருப்பினும், காரியமற்ற நல்ல மனோபாவம் கொண்ட மனிதர்கள் தேவை!

சமூகத்தில் பல்வேறு நிலையிலிருக்கும் பலரோடும் நாம் அன்றாடம் இடைவிடாது இணைந்து செயலாற்றவேண்டியிருப்பது நிதர்சனம். இத்தகைய கூட்டு முயற்சிகளின்போது மற்றவர் மனத்தைக் குறிப்பால் புரிந்து உணர்ந்து செயல்பட்டால் வெற்றிபெறுவது எளிதாகிவிடும்.

பிறர் நிலையைப் புரிந்து கொள்வதற்கு திறந்த மனம் வேண்டும். தான் என்னும் ஆணவம் இல்லாதிருக்க வேண்டும். குறைகாணும் மனோபாவம் இல்லாதிருக்க வேண்டும்.

சிலரிடம் சில நேரங்களில் அனுசரித்தும், சில நேரங்களில் அதட்டியும், சில நேரங்களில் ஆறுதல் கூறியும், சில நேரங்களில் ஆலோசனைகள் வழங்கியும், சில நேரங்களில் அதிகாரம் வழங்கியும், சில நேரங்களில் அறிவுறுத்தியும், பொருத்தமான அணுகுமுறையைக் கையாண்டால் நாம் ஈடுப்பட்டிருக்கும் செயலில் எளிதாய் வெற்றி பெறமுடியும். எனவே மனிதர்களின் மீது கவனம் குறித்து அவர்கள் நலனில் அக்கரை செலுத்தி அவர்களை முறையாக கையாண்டால் வெற்றி பெறுதல் உறுதி.

பெருந்தன்மை இன்மை : செயற்கரிய செய்வர் பெரியர் என்கிறார் வள்ளுவர். பெருங்குணம் படைத்தோர். பெரியர்

நேசம், நேர்மை, நேரம் பேணுதல், நேர்த்தி காத்தல் என்னும் நான்கு பெரும் தன்மைகளோடு சகிப்புத் தன்மை, பொறுமை, உணர்ச்சிகளை சமமாகக் கையாளும் அறிவாற்றல் மற்றும் பணிவு, கனிவு, புன்னகை-போன்றவை இல்லாமையால் பிறரின் நன்மதிப்பைப் பெறமுடியாமல் தவிப்போர் பலர். பெரியோரின் நட்பின்றி வாழ்வில் முன்னேற முடியுமா?

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனத்துக்கண் மாசு இல்லாதவராய் இருத்தல் நம்மைப் பெரியோரோடு பிணைத்துவிடும். பெரியோரின் பிணைப்பு நம்மை உயர்த்திவிடும்!

நட்பின் ஆலோசனை நமது வெற்றிக்குப் பெருந்துணை!

தன்னை அறியாமை : ஒருவர் உலக அரசியலில் வல்லவராய் இருப்பார். தகவல் களஞ்சியமாகத் திகழ்வார். புறஉலகில் புகழ் மிக்கவராய் இருப்பார்.

ஆனால் தான் யார்? என்னும் விழிப்புணர்வு அற்று இருப்பார். இதனால் முழுமை பெறமுடியாமல் அடிக்கடி தடுமாறும் நிலையில் இருப்பார். எனவேதான் அன்று முதல் இன்று வரை ஆன்றோர் பலரும் உன்னையே நீ அறிவாய் என்று உணர்த்தி வருகிறார்கள்.

ஒரு விதையானது – தனக்குள் புதைந்திருக்கும் விருட்சத்தை உணர்ந்து கொள்வதைப் போன்றதே தன்னை அறிவது என்பதாகும்.

தன்னை அறிய தனித்திருந்து தன்னை நோக்கி தன் மனதைச் செலுத்தி, தனது பல எது-பலவீனமெது என நடுநிலையில் ஆராய்ந்து தனது திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்திக் கொண்டு ஆர்வத்தோடு வாழ்வதே உயர்வாகும்.

பலவீனங்களைக் குறைத்து பலத்தை வளர்த்துக் கொள்ளும்போது, மனிதன் முழுமையை நோக்கி நகர்பவனாக மாறுகிறான்.

ஆக… மேற்கண்ட எட்டு முட்டுக்கட்டைகளையும் அறிந்து புரிந்து உணர்ந்து தெளிந்து விட்டாலே… வெற்றியை நாம் நெருங்கிவிட்டோம் என்று பொருள்!

வாருங்கள் தோழர்களே… முட்டுக்கட்டைகளைத் தகர்ப்போம்… முன்னேற்றம் காணும் முடிவெடுப்போம் இன்றே! ஐயம் ஏதும் இருப்பின் தொடர்பு கொள்க.
-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *