நமக்குள்ளே

‘ஜெயிப்பவர்கள் கணக்குப் பார்ப்பதில்லை’ என்ற சோம.வள்ளியப்பனின் சுடர்மிகுந்த சொற்கள் தோல்விமேல் தோல்வி கண்டவர்கள் தலை நிமிர்த்தி வெற்றி வாசலைத் தட்டுவதற்கு வழங்கப்பட்ட முக்கனிச்சாறு! சர்க்கரைத் தேன் பாகு! நற்பசுவின் பால்!
‘இமயவரம்பன்’ பெரியநாய்க்கன்பாளையம்

“வாய்ப்பு வருகிறவரை காத்திருப்பவர்கள் ஜெயிப்பதில்லை. வாய்ப்பு வருவதற்கு முன்பாகவே தயாரித்து வாய்ப்பு வருகிறபோது அதனைக் கவ்விக் கொள்கிறவர்களே ஜெயிக்கிறார்கள்” என்னும் வரிகளில் வெற்றியாளர்களின் வெற்றி ரகசியத்தை அளித்த சோம.வள்ளியப்பன் அவர்களின் உரை வெகு சிறப்பு.
சூரியதாஸ், சிலட்டூர்.

எதைச் சொல்வது? என்கிற தலைப்பில் இந்த இதழில் சொல்லப்பட்ட கருத்துக்கள் சிறியதாக இருந்தாலும் , நம்பிக்கையின் ஊற்றை பெரியதாய் ஊறவைக்கின்றது. மனது வைத்தால் மலையை நகர்த்தலாம் கட்டுரை நம்பிக்கை விதையை மனதுக்குள் ஊன்றியுள்ளது.
தங்க பரமேஸ்ரன், சின்ன கொசப்பள்ளம்.

வாழ்வின் எந்த நிலையிலும் பண்பும், உயர்ந்த ஒழுக்கமான சிந்தனைகளும் மிகவும் முக்கியம் என்பதை வாஞ்சிநாதன் ஆண்கள் கழிப்பறையில் தானே மாய்த்துக் கொண்ட சம்பவம் மூலம் உணர்த்தியிருக்கிறார். த.ராமலிங்கம் அவர்கள். 100% உழைப்பு ‘ 100% வெற்றி என்கிற பார்முலாவும் மிகவும் அருமை.
ஆ.சிவமணி, புன்செய்புளியம்பட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *