உலகத்தமிழ் மாநாடு – ஒரு பார்வை
கோவையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெறவுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல் ஆகியவற்றின் அசுர வளர்ச்சி, மொழி நுட்பங்களுக்கும், கலை நுட்பங்களுக்குமான தேடலையே தேடிப்பார்க்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
மொழியுணர்வு – மொழியறிவு இரண்டுமே மனித மனதைப் பண்படுத்துவதோடு தலைமைப் பண்பையும் வளர்க்க முக்கியக் கருவிகளாய்த் திகழ்கின்றன.
வளரும் தலைமுறைக்கு, தமிழின் தொன்மை மட்டுமின்றி, மொழியறிவால் வரும் நன்மைகளும் தெரிய வேண்டியது அவசியம்.
தமிழாய்ந்த அறிஞர்களும், படைப்பாளிகளும், உலகத் தமிழ் மாநாட்டின் பயன் இளைஞர்களை சென்றடையத் தேவையானதை இப்போதே செய்யத் தொடங்கலாம். இது நம் அன்பான ஆலோசனை.
அனைவருக்கும் எங்கள்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Leave a Reply