அந்தக் காலம் இந்த மாதம்

நவம்பர் 1 – 1951
ஜெட் வார இதழின் முதல் பதிப்பு எட்னா ராபின்சனின் புகைப்படத்தை அட்டைப் படமாக கொண்டு ஜான். எச். ஜான்சன் என்பவரால் வெளியிடப்பட்டது. வாரத்திற்கு 300000 பிரதிகள் விற்றன.

நவம்பர் 7 – 1876

அமெரிக்காவின் முதல் சிகரெட் தயாரிக்கும் இயந்திரத்தின் உரிமத்தை நியூயார்க்கைச் சேர்ந்த ஆல்பர்ட் ஹுக் பெற்றார். நீளமான டியூப் வடிவில் தயாரிக்கப்பட்டு. பின்பு தனி சிகரெட்டுகளாக துண்டிக்கப்பட்டது. 1882-ம் ஆண்டு இந்த சிகரெட்டுகள் சந்தைக்கு வந்தது.

நவம்பர் 12, 1990
உலகம் எங்கும் புகழ் பெற்ற www (World wide web)-க்கான (Hyper text ) முன்வரைவை ஆங்கில கணிப்பொறி விஞ்ஞானி டிப் பெர்னர்ஸ் எழுதிய நாள் இன்று.

நவம்பர் 14, 1994
லாஜ்வேகஸ் நகரில், காம்டெக்ஸ் கணிப்பொறி கண்காட்சியில் மைக்ரோ சாப்ட் நிறுவனம், தான் புதிதாக துவங்கவுள்ள இன்டர்நெட் ஆன்லைன் சர்வீஸ் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிட்டது. பின்னாளில் இது Microsoft Network (MSN) என்று பிரபலமாக அழைக்கப்பட்டது.

நவம்பர் 18, 1477
ஆங்கிலத்தில் வெளிவந்த “டிக்டஸ் அண்ட் சேயிங்ஸ் ஆப் த பிலாஸபர்” என்ற புத்தகம் அச்சிடப்பட்ட நாள் இன்று. இதை வெளியிட்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த முறையான முதல் பதிப்பாளர் வில்லியம் கேக்ஸ்டன்.

நவம்பர் 19, 1909
நிர்வாகவியலின் மூன்று நிபுணர்கள் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த நாள் இன்று. 1935 இல் பிரபலமான நிர்வாகவியல் நிபுணர் பீட்டர் டிரக்கர் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குகளை உயர்த்திய ஜாக்வெல்ச் மற்றும் கேபிள் நியூஸ் நெட்வொர்க் (CNN) நிறுவனத்தை தோற்றுவித்த டேட் டர்னர் 1980ஆம் ஆண்டிலும் பிறந்தனர்.

நவம்பர் 20, 1906
ரோல்ஸ் ராய்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் எலைட் கார் மற்றும் என்ஜின் நிறுவனம் சார்லஸ் ஸ்டூவர்ட் என்பவராலும் பொறியாளர் ஃப்ரெட்ரிக் ஹென்றி என்பவராலும் தோற்றுவிக்கப்பட்டது.

நவம்பர் 29, 1975
பில் கேட்ஸ், பவுல் ஆஸர்க்கு எழுதிய கடிதத்தில் தான் மைக்ரோசாப்ட் என்ற தன் நிறுவனத்தின் பெயரை முதல் முதலில் பயன்படுத்திய தினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *