ஒரு தேசத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்க வேண்டியவை பயண வசதிகள். அடிப்படை வசதிகளான சாலைகள் தொடங்கி அரசு வசமுள்ள ரயில், பேருந்து, விமானங்கள் தனியார் வசமுள்ள ரயில், பேருந்து, விமானங்கள் ஆகியவை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
இந்திய ரயில்களில் கட்டணங்கள் உயரும் அளவு, வசதிகள் உயர்வதில்லை. கணினி வழி பயணப் பதிவுகளையும் பயணிகளையும் கையாள்வதில் ரயில்வேயின் சேவையுணர்வு பெருகுவது அவசியம்.
கணினி பதிவு செய்த பயணிகளுக்கு அடையாள அட்டை முக்கியம். இது பயணத் தொடக்கத்தில் பொருத்தமான விதி. பயணம் முடிந்து வெளியேறும் போது அடையாள அட்டை கேட்கும் அதிகாரத்தை ரயில்வே ஊழியர்களுக்குத் தந்தது யார்? இது பயணிகளை தொந்தரவுக்குள்ளாக்கும் செயலல்லவா?
பாதுகாப்பு கருதிய பரிசோதனைகள், பயணிகளைத் தொந்தரவுக்கு ஆளாக்கக்கூடாது. ரயில்வே இதனை கவனிக்குமா?
Leave a Reply