சிறுசேமிப்பு பெரு மகிழ்ச்சி

– கே.ஆர். நல்லுசாமி

பணம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து செலவு செய்து கொள்ளலாம், வியாபாரம் லாபமாகவே நடக்கிறது, ஆனால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா என்ற கேள்வி வருகிறது? இல்லை, இல்லை சந்தோஷத்திற்கும், பணத்திற்கும், சம்பந்தமில்லை.

எண்ணங்களின் வேறுபாட்டால் தான் மகிழ்ச்சியை பெறமுடியும். வேலைக்குச் சென்றாலும், வேலை கொடுப்பவராக இருந்தாலும் தங்களின் நிலையை உணர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையேல் மகிழ்ச்சி மருந்துக்குக் கூட கிடைக்காது. சரி, எப்படி மகிழ்ச்சியை ஏற்படுத்துவது.

தொழிலாளராக இருக்கும்போது, தான் செய்யும் தொழிலை ரசிக்க வேண்டும். கிடைக்கின்ற வருமானத்தில் தேவையானவைகளை செலவு செய்து பழகிக்கொள்ள வேண்டும். தேவை இருந்தும் வாங்க பணம் இல்லாதபோது அதை வாங்க வேண்டாம், என்ற எண்ணம் வேண்டும். அது தேவை அல்லது மிகத் தேவை என்பதை பிரித்துக் கொள்ள வேண்டும். மிகத் தேவையானவைகளாக இருப்பின் பொருளைப் பொறுத்து குறைந்த வட்டியில் Instalment-ல் லோன் மூலம் வாங்கலாம். அந்த லோன் கட்டி முடித்து ஒன்றன் பின் ஒன்றாக வாங்கலாம். இவைகள் மூலம் மகிழ்ச்சியை பெறமுடியும். தேவைகளை அடைய முடியும். மேலும் ஒவ்வொரு மாதமும் பெறக்கூடிய சம்பளத்திலிருந்து ஒரு தொகையை சிறு சேமிப்பாக சேர்த்து பழக வேண்டும். ஒருமுறை ஒரு சிறு வியாபாரி தனது வருமானத்திலிருந்து தினமும் ஒரு சிறு தொகையை டெபாசிட் செய்து வந்தார். சில காலத்திற்குப் பின் அவர் ஒரு வீட்டை வாங்கினார். அந்த வீட்டிற்குத் தேவையான தொகையின் பெரும் பகுதி அவருடைய சிறு சேமிப்பின் மூலமாக சேர்க்கப்பட்டிருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பின் அவரும் பெரிய தொழில் அதிபர் ஆகிவிட்டார். அவர் வயதாகிவிட்ட நிலையில் அவருடைய உடல் நலமில்லாமல் இருந்தது. பேரன் பேத்திகளுடன் இருக்கும்போது அவரை பார்ப்பதற்கு சென்றிருந்தேன். பேரன் பேத்தியிடம் என்னைக்காட்டி, “ஒரு காலத்தில் சிறு சேமிப்பால் வாங்கப்பட்ட அந்த வீடு நான் வாங்கி கொடுத்ததாக அவர்களிடம் கூறி, முதன் முதலாக சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தியவரும் இவர்தான். சிறு சேமிப்பு மூலமாக இவ்வளவு பெரிய சொத்தை பெறமுடியும் என்பதையும் உணர்த்தியவர் என்று” என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. காரணம் அந்த சிறு சேமிப்பு தொகையை அவருடைய தொழில்கூடம் தேடிச்சென்று சிறு தொகையை சரியான நேரத்தில் தவறாமல் சென்று சேமிக்கும் வாய்ப்பை கரூர் வைஸ்யா வங்கி அளித்தது. சிறு சேமிப்பு வசூலிப்பாளராக என்னை நியமித்ததிலிருந்து பலருக்கு சேமிப்பின் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

மற்றொரு தொழில் அதிபர் சேமிப்பை எப்பொழுதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். அவர் மனைவி கேட்கும் எந்தப் பொருளாக இருந்தாலும் முதலில் நிராகரித்து விடுவார். மேலும் அந்தப் பொருளும் மற்ற வீட்டு உபயோக பொருள்களும் சேர்ந்தால் அன்று 10,000 ரூபாய் ஆகலாம். இது ஒரு தொகையா எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவார். இன்று வரை முழுமை பெறா வாழ்க்கையே குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அவரிடம் பணம் இருந்தும் குடும்பம் மகிழ்ச்சியில்லாத வாழ்க்கையே வாழ்ந்து வருகிறது. ஆக, மகிழ்ச்சி என்பது பணத்தில் இல்லை. மனத்தால் உள்ளது. சம்பாதிக்கும் பணம் சம்பளமாக இருக்கலாம், தொழில் மூலம் லாபம் சம்பாதிக்கலாம். ஆனால் தேவைக்கு செலவு செய்து மீதியை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோமேயானால் வாழ்க்கை எப்பொழுதும் மகிழ்ச்சியே.

  1. smythli

    namudhaya madha varumanathil 20% semikanum nu oru friend solli kettuken, adha pala nerangalla try pannu nalla labhathaium adanji eruken, thangal mudhal selau semipaga erukattumnu tnagar kita erukum oru complex la erudhi erundhau miga sirandha ariurainu ninaikaren, kizhmattathula erundhu melmatta makkal varikum edhu porundhum, endha pagudhi unmaiyil ubhayogamanadhu, nandri iyya.

    smythli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *