சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் மற்றும் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும் புதுவாசல்

சுய முன்னேற்ற பயிற்சியாளராக வேண்டுமா?

முன்னேற வேண்டும் என்ற ஆசையை விட மற்றவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற ஆசை பெரியது. இப்படி பெரிய ஆசை கொண்டவர்கள்தான் சுயமுன்னேற்றப் பயிற்சியாளராக விழைகிறார்கள்.

மேற்கு வங்கம், முசிதாபாத் நகரைச் சேர்ந்த பாபர் அலி சுய முன்னேற்ற பயிற்சியாளர்கள் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணம்.

வறுமையான குடும்பத்தில் உள்ள அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு கல்வி என்பது நிறைவேறாக் கனவு. அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் ஒரே நபர் 9 ம் வகுப்பு படிக்கும் பாபர் அலி.

வருட கல்விக் கட்டணமான ஆயிரத்து எண்ணுôறு ரூபாய்க்கு கூட வழியில்லாத வாழ்க்கை என்றாலும் ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால் தொடர்ந்து பள்ளிக்குச் சென்றான்.

பாபர் அலி பள்ளி முடித்து வந்ததும் நண்பர்களோடு விளையாடும் விளையாட்டு ஆசிரியர் மாணவர் விளையாட்டு. பாபர் அலிக்கு அந்த விளையாட்டு ரொம்ப பிடித்திருந்தது. மெல்ல மெல்ல அப்பகுதி குழந்தைகள் எல்லோருக்கும் பிடிக்க ஆரம்பித்தது.

விளையாட்டிற்கு குழந்தைகள் நிறைய வர வர பாபர் அலி, தான் பள்ளியில் கற்றுக் கொண்டது எல்லாவற்றையும் அன்று மாலை ஆசிரியர் மாணவர் விளையாட்டில் சொல்லிக் கொடுக்கத் துவங்குகிறான்.

பள்ளி முடித்து கிராமம் வந்ததும் பாபர் அலி பெல் அடிப்பான். வயல் வேலைகள் முடித்து வீடு திரும்பிய குழந்தைகள் மரத்தடியில் கூடுவார்கள். எந்த கட்டமைப்பு இல்லாவிட்டாலும் மரத்தடியில் அந்த முயற்சி பள்ளிக்கூடமாக மாறிவிட்டது.

பாபர் அலியிடம் இன்று 800 பேர் படிக்கிறார்கள். பாபர் அலியின் உடன்படிக்கும் நண்பர்கள் சிலர்தான் ஆசிரியர்கள். பாபர் அலியை உலகத்தின் இளம் வயது தலைமை ஆசிரியராக பிபிசி சேனல் அறிவித்திருக்கிறது.

பதினொன்றாம் வகுப்பு பாபர் அலி நல்ல முயற்சிகளுக்கு ஓர் நம்பிக்கை உதாரணம். பாபர் அலி என்ற மாணவன் ஆசிரியராக மாறியபோது கல்வி வாசனை இல்லாத 800 குழந்தைகள் மேம்பட்டார்கள். ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியராக, ஒரு சிறந்த சுயமுன்னேற்ற பயிற்சியாளராக மாறினால் நாம் எத்தனை ஆயிரம் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.

சுயமுன்னேற்ற பயிற்சியாளராவ தற்கான பயிற்சியை நமது நம்பிக்கையும் சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் நூற்றுக்கு நூறு இயக்கமும் இணைந்து வழங்குகிறது.

நாமும் முன்னேற வேண்டும், மற்றவர்களையும் முன்னேற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

உங்கள் விண்ணப்பம், உங்களைப் பற்றிய சிறப்பான அறிமுகமாக இருக்க வேண்டும். உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரத்துடன், பயிற்சியாளர் ஆக விரும்புவதற்கான காரணத்தையும் நமது நம்பிக்கை முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.

பயிற்சியாளராவதற்கான பயிற்சியோடு களமும் வழங்கப்படும்.

வாருங்கள் வடம் பிடிப்போம். வரலாற்றில் இடம்பிடிப்போம்.

என்றென்றும் நம்பிக்கையுடன்…
கிருஷ்ண.வரதராஜன்
நூற்றுக்கு நூறு இயக்கம்
சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்.

நூற்றுக்கு நூறு இயக்கம் பற்றி தெரிந்து கொள்ள… www.Centummovement.in

2 Responses

  1. SAKTHIVEL.C

    I READ YOUR BOOK ” VEETIRKKUL VETRI”.REALY A SUPERB MORE USEFUL TO PARENTS LIKE ME THOSE WHO ARE HAVING YOUNG CHILD.THANKING YOU.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *