சாதனைப் பெண்கள் 15 பேருக்கு “நித்திலா” விருது!

ஈரோடு சிகரம் உங்கள் உயரம்  நிகழ்ச்சியில் மகளிர் தின விழா!

மகளிர் தின நூற்றாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி ஈரோடு சிகரம் உங்கள் உயரம் அமைப்பின் சார்பில் சாதனைப் பெண்கள் 13 பேருக்கு நித்திலா விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஈரோடு

சிகரம் உங்கள் உயரம் அமைப்பின் மகளிரணி தொடக்க விழாவும் கைகோர்க்க, மார்ச் 14 மாலை ஈரோடு சக்தி மசாலா அரங்கம் களைகட்டியது.

விழாவிற்கு கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ராயல் பார்க் திரு. ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். “சிகரம் உங்கள் உயரம்” அமைப்பின் நிறுவனர் தலைவர் கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா சாதனைப் பெண்களுக்கு நித்திலா விருதுகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர் பேசும் போது, “நித்திலா என்றால் முத்து என்று பொருள். தங்கம் வைரம் போன்றவை குறிப்பிட்ட இடத்தில்தான் கிடைக்கும். ஆனால் முத்து உருவாகும் இடங்கள் எத்தனையோ உள்ளன. கடலோரத்தில், வயலில், யானையின் தந்தத்தில் என்று எத்தனையோ இடங்களில் முத்துக்கள் கிடைப்பது போல் எண்ணிலடங்காத துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் இங்கே பாராட்டப்படுகின்றனர். எனவே இந்த விருதுக்கு “நித்திலா” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சிவனின் வலப்பக்கமும், சக்தியின் இடப்பக்கமும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனதாக சொல்வார்கள். அப்படியானால் சிவனின் இடப்பக்கமும், பார்வதியின் வலப்பக்கமும் என்னாயின என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு ஞானி ஒருவர் அந்த இரண்டு பகுதிகள்தான் உலகில் ஆண்களாகவும், பெண்களாகவும் பிறந்துள்ளன என்றாராம். ஆதிகாலத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமமாகப் போற்றப் பட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அடக்குமுறைக்கு ஆளாயினர். ஈரோடு போலவே மற்ற இடங்களில் செயல்படும் சிகரம் உங்கள் உயரம் அமைப்பின் சார்பில் அடுத்த ஆண்டு முதல் சாதனைப் பெண்களுக்கு “நித்திலா” விருது வழங்கப்படும். திரு. நவநீத கிருஷ்ணன், திரு. ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனையின்படி இந்த விருதுகள் உருவாகியுள்ளன. அவர்களுக்கு என் நன்றிகள்” என்று குறிப்பிட்டார்.

“நித்திலா” விருது பெற்ற சாதனைப் பெண்கள் ஈழ்.பாரதி பரமசிவன் ஈநஙந டட்க்., (ஆயுர்வேதிக் சித்தா டாக்டர்), திருமதி.த.வினாதா (துணைக்காவல் ஆய்வாளர்), திருமதி.ங.பரிமளா தேவி ஆ.இர்ம்.,(நிர்வாக இயக்குநர் – சுமங்கலி பொங்கே ஷாப்), ஈழ்.த.சுமதி பத்மநாபன் ஙஆஆந.,ஈஎஞ.,பசட., (நிஷாந்த் மருத்துவமனை), திருமதி. சுசீலா அருணாச்சலம் (அனைத்திந்திய உறுப்பினர் – கைவினைப் பொருட்கள் கழகம்), செல்வி.ந.அர்ச்சனா (அதெலெடிக்ஸ் மற்றும் கால்பந்து தேசிய வீராங்கனை), திருமதி. சரஸ்வதி சதாசிவம் (நிர்வாக இயக்குநர் – ஸ்ரீ மீனாட்சி டெக்ஸ்டைல்ஸ்), திருமதி.ங.நிர்மலாதேவி (நிர்வாக இயக்குநர் – நந்தா கலைக்கூடம்), திருமதி.இ.சரஸ்வதி (மனவளக்கலை பேராசிரியர்), திருமதி.ங.பானுமதி (மனவளக்கலை பேராசிரியர்) திருமதி.ராதாமணி பாரதி (மாமன்ற உறுப்பினர் – ஈரோடு மாநகராட்சி), திருமதி. உஷா இளங்கோ (உம்ங்ழ்ஹப்க் இயக்குநர் – அம்ஜ்ஹஹ் இந்தியா), திருமதி.அ.நாகரத்தினம் ஆ.அ,ஆக (வழக்கறிஞர்) ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர். ஈரோடு சிகரம் உங்கள் உயரம் அமைப்பின் மகளிரணி அமைப்பாளர் செல்வி.பிரியா நன்றி நவின்றார். விழா நிகழ்ச்சிகளை கண்ணன் டிபார்ட்மெண்ட்டல்ஸ் முதுநிலை மேலாளர்  திரு. சரவணக்குமார் தொகுத்து வழங்கினார்.

“பெண்மையின் புதிய குணங்கள்”

விழாவில் சிறப்புரை நிகழ்த்தி னார் முனைவர் உமா தேவராஜன். “பெண்கள் என்றாலே அவர்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய குணங்கள் வேண்டுமென்று சொல்வார்கள். புதுயுகப் பெண்கள் உச்சம், திடம், ஞானம், உயிர்ப்பு ஆகிய அருங் குணங்களைக் கொண்டுள்ளார்கள். பிரச்சினை தருபவர்களைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். முயற்சிக்கும் துறைகளில் முத்திரை பதிப்பதில் சோர்வு கூடாது. பெண்களுக்கு இயல்பாகவே ஞானம் உண்டு. பல பழிச் சொற்களையும் வசைச் சொற்களையும் கடந்து சாதிக்கும் ஆற்றலுடன் பெண்ணினம் வளர்கிறது” என்று குறிப்பிட்டார்.

பெரியபுராணம் தொடங்கி பாரதி, கவிமணி, கண்ணதாசன், வைரமுத்து ஆகியோர் வரை            இலக்கியங்களில் பெண்மையின் சித்தரிப்புகளை நயம்பட மேற்கோள் காட்டி உற்சாக உரை நிகழ்த்தினார் உமா தேவராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *