விரல்பிடித்து கடைவீதி வந்த
மகன், கடையை வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில் பிடியை நழுவ விட்டான். அப்பா ஒளிந்து கொண்டார். அப்பாவைத் தேடினான். சிறிது நேரம் கழித்து உதடுகள் பிதுங்க, விசும்பத் தொடங்கிய போது அப்பா வந்து அள்ளிக் கொண்டார். மகன் தந்தையை மறந்திருந்தபோது தந்தை ஒளிந்திருந்தார். ஆனால் மகனைக் கண் காணித்துக் கொண்டிருந்தார். கடவுளும் அப்படித்தான் நாம் தேடாத போது தென் படுவதில்லை. ஆனால் நம்மைப் பார்த்துக் கொள்கிறார்.
M.J. SYED ABDULRAHMAN
Please thank you
Good Wishes,