‘அறியக் கூடிய ஆளுமைகள்’ கட்டுரையில் தனி மனிதனை உயர்த்திப் பிடிக்கும் விஷயங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. மரபின்மைந்தனின் கவிதைகள் எழுத்துக்களை இழுத்துப் பிடித்து படிக்க வைத்தன.
தங்க பரமேஸ்வரன்
திட்டக்குடி.
வடிவமைப்பு, கட்டுரைகள், துணுக்குகள், அட்டைப்படக் கட்டுரை என்று இதழுக்கு இதழ் புதுமைகளை புகுத்தி வருகிறீர்கள். இதழுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. தரமான படைப்புகளை ரசனையோடு வெளியிடும் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுக்கள்.
வித்யாலஷ்மி
ஈரோடு.
நமது நம்பிக்கை இதழ் ஒவ்வொருவருடைய இல்லங்களில் இருக்கவேண்டிய பத்திரிகை. கோவையிலிருந்து வெளிவரும் மாத இதழ் தமிழ்நாட்டில் வெற்றிக் கொடியை நிலை நாட்டி உள்ளது.
முகுந்தன்
சேலம்.
ஒவ்வொரு மாதமும் வெளிவரும் இதழில் எங்களுக்கு மிகவும் பிடித்த பகுதி கான்ஃபிடன்ஸ் கார்னர். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் கவிதை மற்றும் கட்டுரை ‘மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்’ போன்றவை மிகவும் அருமை.
ஸ்ரீ சக்தி
மடத்துகுளம்.
சின்னவர் ஆனால் பெரியவர் என்ற புதிய கட்டுரை திறமை வாய்ந்த குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த புதிய முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள். பேராசிரியர் கனகராஜ் அவர்களின் நேர்காணல் ஐ ஏ எஸ் தேர்வு குறித்த எங்களது சந்தேகங்களை மிகத் தெளிவாக நிவர்த்தி செய்யும் விதத்தில் இருந்தது.
எஸ்.பிரபாகரன்
இடிகரை.
Leave a Reply