ஒவ்வொரு முறையும் விழும் அலைகள்
மீண்டும் முழுவீச்சோடு எழத் தவறுவதில்லை.
விழுந்து எழுவதே வெற்றிசூத்திரம்.
உங்கள் தோல்விகளை பிறரின் வெற்றிகளை வைத்து வரையறுக்காதீர்கள்.
உங்கள் வெற்றிகளை பிறரின் தோல்விகளை வைத்தும் வரையறுக்காதீர்கள்.
இலக்கை நிர்ணயிப்பதும் அதை கடப்பதும் நீங்களாக மட்டுமே இருங்கள்.
பென்சில் கற்று தரும் பாடங்கள்:
1. நம் செயல்களின்அடையாளத்தை விட்டுச்செல்கிறோம்.
2. தவறுகளைத் திருத்த வாழ்க்கை நம்மை அனுமதிக்கிறது.
3. கூர்மையாக்கப்படும்போது ஏற்படும் வலிகள்தான் நம் செயல்களில் தெளிவைக் கூட்டுகின்றன.
4. வெற்றியாளராக திகழ, சிறந்த வழிகாட்டிகளின் கைகளில் நம்மை ஒப்படைக்க வேண்டும்.
கடல் அனைவருக்கும் பொதுவானதே.
சிலர் முத்தள்ளுகிறார்கள்.
சிலர் மீன்களை பெறுகிறார்கள்.
சிலர் நனைந்த கால்களுடன் மட்டுமே திரும்புகிறார்கள்.
முயற்சிகளுக்கு ஏற்ப வெற்றிகள் அமையும்.
விதை துளிர்க்க சத்தம் எழுப்புவதில்லை.
மரங்கள் சரிகையில் பெரும் இரைச்சலை ஏற்ப்படுத்துகின்றன.
அழிவுகள் ஆர்ப்பரிக்கும்.
ஆக்கங்கள் அமைதிக்காக்கும்.
சாதனைகள் அமைதியாகவே தொடங்குகின்றன.
நம் வளச்சியை கணிக்க:
ஒப்பிட வேண்டும்,
பிறரோடு அல்ல. நேற்றுகளை இன்றோடு.
தோல்விகளுக்கான காரணம்:
மாமரத்தடியில் நின்று பலாக்கனிகளை எதிர்பார்க்கிறோம்.
ஒன்று நம் எதிர்ப்பார்ப்பை மாற்ற வேண்டும் அல்லது
மரங்களை மாற்ற வேண்டும்.
Leave a Reply