கேஸ் ஸ்டடி

உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில், நீதிபதியிடம் கருத்தை முறையிடும்போது ‘மை லார்டு’ என்று அழைக்கும் பழைய பழக்கம் ஒன்று உண்டு.

இப்படி அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக ‘யுவர் ஹானர்’ என்று அழைத்தால் போதும் என்று 2006 ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி அரசு கெஸட்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இன்று வரை மை லார்டு என்ற அழைப்பது மாறவில்லை. சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தியாகு அவர்கள், மேற்கண்ட திருத்தங்களை நினைவூட்டி ‘மை லார்டு’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை தவிர்க்குமாறு நோட்டீஸ் ஒன்றை கோர்ட் நோட்டீஸ் போர்டு மூலம் அறிவித்தார்.

அதற்கு, பார் அசோஷியேஷன் முன்னாள் தலைவர் ஒருவர் கோர்ட்டிலேயே, ‘இத்தனை வருட பழக்கத்தை கைவிடுவது கடினம்’ என்று கருத்து தெரிவிக்கிறார்.

இந்த உலகத்தில் மாறாதது மாற்றம் ஒன்றுதான் என்று சொல்லும் நாம் ஒரு வார்த்தையை மாற்றிச் சொல்லக்கூட பழக்கத்தின் காரணமாக முடியாமல் இருக்கிறோம் என்பது மாற்றத்தை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதற்கு சரியான உதாரணம்.