தோல்வியை தோல்வியடைய வைப்பது எப்படி?
சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி
இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் ஒவ்வொருவருக்கும் இந்தியன் என்ற உணர்வு 100% இருக்க வேண்டும். தினமும் 12 மணி நேரம் உழைத்திட வேண்டும்.
சட்டத்தை மீறாமல் அதை மதித்து பின்பற்றி நடக்க வேண்டும். வரி விதிப்புகளை பின்பற்ற வேண்டும். லஞ்சம் வாங்காமல், லஞ்சம் கொடுக்காமல் வாழ பழகிடவேண்டும். வீட்டின் மீது காட்டும் பற்று நாட்டின் மீதும் காட்டிட வேண்டும். தனி மனிதன் மாறினாலே நம் நாடு தானாக வல்லரசாக மாறும்.
பி.கீதாஞ்சலி, பி.ஹரிப்பிரியா, திருப்பூர்.
உலகிலேயே அதிகளவு இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. இந்தளவுக்கு எழுச்சி மிகு இளைஞர்கள் கூட்டத்தை ஒன்று திரட்டி மனித ஆக்க சக்தியாக மாற்ற பெரும் வாய்ப்பு வழங்க வேண்டும். ஆரோக்கியமான மனித சக்தியால் வளமான பாரதத்தை பல துறைகளில் சாதிக்க முடியும்.
ப.அபிநயா, திட்டக்குடி,
Leave a Reply