மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

மரபின் மைந்தன் ம. முத்தையா

மனம் எனும் மாயக்கம்பளம்
குழந்தைப் பருவத்தில் சொல்லப்படும் மிகப்பல கதைகளில் முக்கியமானது மாயக் கம்பளம். மனதில் ஓர் இடத்தை நினைத்தால் மறுவிநாடியே அங்கே கொண்டு போய் சேர்க்கக்கூடிய மாயக்கம்பளம் அந்தக் காலக் குழந்தைகள் மனதில் அடிக்கடி வந்து போகும். காலையில் கண்விழித்துப் பார்த்தால் படுக்கையில் இருப்பது தெரிய வந்து, பக்கத்தில் எங்கேனும் மாயக்கம்பளம் மடித்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்காத குழந்தைகளே அன்றைக்குக் கிடையாது.

ஆனால், மனிதர்கள் தங்கள் இலக்குகளை உடனடியாய் சென்றடைய மாயக் கம்பளம் எதுவும் கிடையாது. தங்கள் இலக்குகளை எட்டுவதற்கான தூரமும் நேரமும் அவரவர் சாமர்த்தியத்திற்கேற்ப மாறுபடும். தவழ்ந்தோ, நடந்தோ ஓடியோ, தங்கள் இலக்குகளை எட்டியே தீர வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு.
இலக்கை சென்றடைவதற்கு எடுத்துக் கொள்கிற முயற்சிகளை, நடைமுறைகள் என்று பார்ப்பவர்கள், தூரத்தைக் கடக்கிறார்கள். அதனை சிரமம் என்று நினைப்பவர்கள், மலைத்துப் போய் நிற்கிறார்கள்.
மனித குலத்தின் முன்வைக்கும் மகத்தான சாதனைகள் ஒவ்வொன்றுக்கும் பின்பாக யாராவது மலைகள் நகர்த்தியிருக்கிறார்கள்.
கடல்வழிப் பயணத்தில் காதல் மிகுந்த கொலம்பஸ், பதினாறாம் நூற்றாண்டில் படாத பாடுகள் பட்டுக்கொண்டிருந்தார். புதிய தேசத்தைக் கண்டறிவதற்கான தேவைகள் – நிதிகள் – மனிதர்கள் – உபகரணங்கள் எல்லாவற்றுக் காகவும் மனுக்கள் சமர்ப்பித்துவிட்டு மனிதர் நெடு நாட்கள் காத்திருந்தார்.
பெரும் போராட்டத்திற்குப் பிறகு உதவிகள் கிடைத்தன. மேற்கொண்ட பயணத்தில் கடலும் வானும் கொந்தளித்த பொழுதுகளில் மரண பயத்திலும் மனவுறுதி குலையாமல் அவரால் பயணங்களைத் தொடர முடிந்தது.
திசைகளை அனுமானித்துக் கொண்டு, தெரியாத இலக்கு நோக்கி முடிவுறுமா முடிவுறாதா என்றே தெரியாத பயணங்களைப் பிடிவாதமாக மேற்கொண்டதில் கொலம்பஸ், மலைகளை மட்டுமல்ல… கடல்களையே நகர்த்தினார்!!
குறிப்பிட்ட எல்லையில் தன் செயல்திறன் ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு சவால்களோ சோதனைகளோ வருகிறபோதுதான் தடைகள் ஏற்படுகின்றன. இந்தத்தடைகள் இரண்டு வகை. ஒன்று, மனத்தடை. இன்னொன்று செயல்தடை. இதில் மிகவும் சுவாரசியமான அம்சம் என்ன வென்றால், மனத்தடையை உடைத்து விட்டால் செயல் தடை தானாக உடைந்து போகிறது. இந்த செயல் சாத்தியமில்லை என்கிற எண்ணம்தான் மனத்தடை.
புகழ்பெற்ற மருத்துவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்து சேர்கிற நோயாளி களையோ, விபத்துகளில் அடிபட்டவர்களையோ பரிசோதித்த மாத்திரத்தில், நலக்குறைவின் தீவிரத்தை நன்றாக உணர்ந்து கொள்கிறார்கள். அதன் காரணமாக, பின்னடைவின் தீவிரத்தைக் குறைத்து நலமடைய தன் தொடக்கப்புள்ளி நோக்கி நோயாளியை அழைத்துச் செல்லும் முயற்சியைத் தொடங்கி விடுகிறார்கள்.
தலைக்காயத்துடன் கொண்டு வரப்பட்ட ஒருவரை சில விநாடிகள் கவனித்தார், ஒரு மருத்துவ நிபுணர். அப்போது செய்தியாளர்கள் சிலருடன் ஓய்வாகப் பேசிக் கொண்டிருந்தார். ”சரி நண்பர்களே! இந்த நோயாளி விட்டால் சில நிமிஷங்களில் கோமா நிலைக்குப் போய் விடுவார். எனவே அவரை சரி செய்தாக வேண்டும். நாம் பின்னர் சந்திப்போம்” என்று வெகு இயல்பாகக் கூறி விடை பெற்றார். மிகத் தீவிரமான பிரச்சனையில் நோயாளிக்கு திசை தெரியவில்லை. மருத்துவருக்குத் தீர்வு தெரிகிறது. நோயாளியைக் கொண்டு வந்து சேர்த்தவர்கள் மலைத்து நிற்கிறார்கள். மருத்துவர் மலையை நகர்த்துகிறார்.
நம்முடைய சிக்கல்களின்போது நாம் மலைத்து நிற்கிறோமா, மலையை நகர்த்து கிறோமா என்று பார்ப்பது முக்கியம்.
ஒரு சிக்கலைத் தீர்க்கப் புறப்பட்டு விட்டாலே மலை நகரத் தொடங்கிவிட்டதாகப் பொருள். அப்படியானால் சில சமயம், தீர்த்து வைக்க விரும்பினாலும்கூட தீர்வை நோக்கி நகர முடியாமல் திணறுகிறோமே, அது ஏன்?
நமக்கு ஏற்படுகிற பிரச்சினையும் அதற்கு நாம் மனதில் கொள்கிற தீர்வும் எந்த வகையில் அடங்கும் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது.
1. பழைய பிரச்சினை; பழைய தீர்வு
முன்னர் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு ஒரு தீர்வு நம்மால் எப்போதோ கையாளப் பட்டிருக்கும். மீண்டும் மீண்டும் அதே வழியில் முயற்சி செய்து கொண்டிருந்தால் அந்தத் தீர்வு காலாவதியாகியிருக்கும். ஆறுமாதக் குழந்தையாய் இருந்தபோது சாப்பிட்ட இருமல் மருந்து, இருபது வயதில் உதவாதது போலத்தான் இதுவும். ஒரு பிரச்சினைக்கு நம்வசம் உள்ள தீர்வு காலாவதியான தீர்வா, காலத்திற்கேற்ற தீர்வா என்று கண்டுகொள்வது முக்கியம்.
பழைய பிரச்சினை; புதிய தீர்வு
சில நேரங்களில் பழைய தீர்வுகள் பயன் தராதென்று தெரிந்ததுமே, புதிய தீர்வுகளை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். புதிய அணுகு முறையில் ஒன்றை அணுகுகிறபோது, அது தற் காலிகத் தீர்வாக மட்டுமில்லாமல் நிரந்தரத் தீர்வாகவும் ஆகிவிடுகிறது. சாலைகளைக் கடந்து போகிற இடத்தில் நெரிசல் ஏற்பட்டால் போக்கு வரத்துக் காவலரை நியமிப்பது தற்காலிகத் தீர்வு. பாலம் கட்டுவது நிரந்தரத் தீர்வு.
புதிய பிரச்சினை; பழைய தீர்வு
சில வேளைகளில் புதிதாக ஏற்படுகிற பிரச்சினைகளுக்கும் பழைய அனுபவங்கள் தீர்வுகளைத் தரக்கூடும். இந்த அணுகுமுறை, பெரியவர்களின் அறிவுரைகளில் வெளிப் படுவதைப் பல இடங்களில் பார்க்கலாம். படித்த படிப்பும் பயன்படுத்தும் உத்திகளும் எல்லா இடங்களிலும் தீர்வைத் தந்துவிடாது என்பதால் ஒன்றை வெவ்வேறு கோணங்களில் பார்க்கிற போது ஏதேனும் ஒரு வாசல் எப்படியோ திறக்கிறது.
புதிய பிரச்சினை; புதிய தீர்வு
புதிதாக ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு சில நேரங்களில் மிகவும் புதிய தீர்வுகளே தேவைப் படக்கூடும். இதுவரை இல்லாத சூழலில் புதிய யுகத்துக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் புதிதாகவே இருக்கலாம்.
ஒரு காலத்தில் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு, கணவன் கோபப்பட்டால் மனைவி பேசாமல் இருப்பது தீர்வு என்று கருதப்பட்டது. இன்று யாருக்கிடையே என்ன பிரச்சனை என்றாலும் மனம்விட்டுப் பேசுவதுதான் மிகச் சிறந்த தீர்வு என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.
எனவே, பிரச்சனையின் கோணங்கள் புதிதாக இருந்தால் புதிய கோணங்களில்தான் தீர்வுகளையும் உருவாக்க வேண்டி வரும்.
ஒரு கூழாங்கல்லைக்கூட மலையென்று கருதி, கவலைப்படுபவர்கள் தீர்வுக்கான முயற்சிகளைத் தொடங்கியபின்னர், ”இது இத்தனை பெரிதா” என்று வியந்து போகக்கூடும். மலை போன்ற பிரச்சினையை கூழாங்கல் என்று தவறாக நினைப்பவர்கள் சிரமப்படக்கூடும்.
எப்போதுமே பிரச்சினையின் வீரியத்தை விடவும், தீர்வைத் தேடுகிற வீரியம் இன்னும் பெரிதாகத்தான் இருக்கும். ஒரு காலத்தில் உயிர்க் கொல்லி நோய்களென்று கருதப்பட்டவை முற்றாக அழிக்கப்பட்டதும் அப்படித்தான். மனதில் திடமிருந்தால், நம்பிக்கை என்கிற பலமிருந்தால் எந்த மலையையும் எளிதில் நகர்த்தலாம்.
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
– மரபின் மைந்தன் ம. முத்தையா
மனம் எனும் மாயக்கம்பளம்
குழந்தைப் பருவத்தில் சொல்லப்படும் மிகப்பல கதைகளில் முக்கியமானது மாயக் கம்பளம். மனதில் ஓர் இடத்தை நினைத்தால் மறுவிநாடியே அங்கே கொண்டு போய் சேர்க்கக்கூடிய மாயக்கம்பளம் அந்தக் காலக் குழந்தைகள் மனதில் அடிக்கடி வந்து போகும். காலையில் கண்விழித்துப் பார்த்தால் படுக்கையில் இருப்பது தெரிய வந்து, பக்கத்தில் எங்கேனும் மாயக்கம்பளம் மடித்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்காத குழந்தைகளே அன்றைக்குக் கிடையாது.
ஆனால், மனிதர்கள் தங்கள் இலக்குகளை உடனடியாய் சென்றடைய மாயக் கம்பளம் எதுவும் கிடையாது. தங்கள் இலக்குகளை எட்டுவதற்கான தூரமும் நேரமும் அவரவர் சாமர்த்தியத்திற்கேற்ப மாறுபடும். தவழ்ந்தோ, நடந்தோ ஓடியோ, தங்கள் இலக்குகளை எட்டியே தீர வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு.
இலக்கை சென்றடைவதற்கு எடுத்துக் கொள்கிற முயற்சிகளை, நடைமுறைகள் என்று பார்ப்பவர்கள், தூரத்தைக் கடக்கிறார்கள். அதனை சிரமம் என்று நினைப்பவர்கள், மலைத்துப் போய் நிற்கிறார்கள். மனித குலத்தின் முன்வைக்கும் மகத்தான சாதனைகள் ஒவ்வொன்றுக்கும் பின்பாக யாராவது மலைகள் நகர்த்தியிருக்கிறார்கள்.
கடல்வழிப் பயணத்தில் காதல் மிகுந்த கொலம்பஸ், பதினாறாம் நூற்றாண்டில் படாத பாடுகள் பட்டுக்கொண்டிருந்தார். புதிய தேசத்தைக் கண்டறிவதற்கான தேவைகள் – நிதிகள் – மனிதர்கள் – உபகரணங்கள் எல்லாவற்றுக் காகவும் மனுக்கள் சமர்ப்பித்துவிட்டு மனிதர் நெடு நாட்கள் காத்திருந்தார். பெரும் போராட்டத்திற்குப் பிறகு உதவிகள் கிடைத்தன. மேற்கொண்ட பயணத்தில் கடலும் வானும் கொந்தளித்த பொழுதுகளில் மரண பயத்திலும் மனவுறுதி குலையாமல் அவரால் பயணங்களைத் தொடர முடிந்தது.
திசைகளை அனுமானித்துக் கொண்டு, தெரியாத இலக்கு நோக்கி முடிவுறுமா முடிவுறாதா என்றே தெரியாத பயணங்களைப் பிடிவாதமாக மேற்கொண்டதில் கொலம்பஸ், மலைகளை மட்டுமல்ல… கடல்களையே நகர்த்தினார்!!
குறிப்பிட்ட எல்லையில் தன் செயல்திறன் ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு சவால்களோ சோதனைகளோ வருகிறபோதுதான் தடைகள் ஏற்படுகின்றன. இந்தத்தடைகள் இரண்டு வகை. ஒன்று, மனத்தடை. இன்னொன்று செயல்தடை. இதில் மிகவும் சுவாரசியமான அம்சம் என்ன வென்றால், மனத்தடையை உடைத்து விட்டால் செயல் தடை தானாக உடைந்து போகிறது. இந்த செயல் சாத்தியமில்லை என்கிற எண்ணம்தான் மனத்தடை.
புகழ்பெற்ற மருத்துவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்து சேர்கிற நோயாளி களையோ, விபத்துகளில் அடிபட்டவர்களையோ பரிசோதித்த மாத்திரத்தில், நலக்குறைவின் தீவிரத்தை நன்றாக உணர்ந்து கொள்கிறார்கள். அதன் காரணமாக, பின்னடைவின் தீவிரத்தைக் குறைத்து நலமடைய தன் தொடக்கப்புள்ளி நோக்கி நோயாளியை அழைத்துச் செல்லும் முயற்சியைத் தொடங்கி விடுகிறார்கள். தலைக்காயத்துடன் கொண்டு வரப்பட்ட ஒருவரை சில விநாடிகள் கவனித்தார், ஒரு மருத்துவ நிபுணர். அப்போது செய்தியாளர்கள் சிலருடன் ஓய்வாகப் பேசிக் கொண்டிருந்தார். ”சரி நண்பர்களே! இந்த நோயாளி விட்டால் சில நிமிஷங்களில் கோமா நிலைக்குப் போய் விடுவார். எனவே அவரை சரி செய்தாக வேண்டும். நாம் பின்னர் சந்திப்போம்” என்று வெகு இயல்பாகக் கூறி விடை பெற்றார். மிகத் தீவிரமான பிரச்சனையில் நோயாளிக்கு திசை தெரியவில்லை. மருத்துவருக்குத் தீர்வு தெரிகிறது. நோயாளியைக் கொண்டு வந்து சேர்த்தவர்கள் மலைத்து நிற்கிறார்கள். மருத்துவர் மலையை நகர்த்துகிறார்.
நம்முடைய சிக்கல்களின்போது நாம் மலைத்து நிற்கிறோமா, மலையை நகர்த்து கிறோமா என்று பார்ப்பது முக்கியம்.
ஒரு சிக்கலைத் தீர்க்கப் புறப்பட்டு விட்டாலே மலை நகரத் தொடங்கிவிட்டதாகப் பொருள். அப்படியானால் சில சமயம், தீர்த்து வைக்க விரும்பினாலும்கூட தீர்வை நோக்கி நகர முடியாமல் திணறுகிறோமே, அது ஏன்?
நமக்கு ஏற்படுகிற பிரச்சினையும் அதற்கு நாம் மனதில் கொள்கிற தீர்வும் எந்த வகையில் அடங்கும் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது.
1. பழைய பிரச்சினை; பழைய தீர்வு
முன்னர் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு ஒரு தீர்வு நம்மால் எப்போதோ கையாளப் பட்டிருக்கும். மீண்டும் மீண்டும் அதே வழியில் முயற்சி செய்து கொண்டிருந்தால் அந்தத் தீர்வு காலாவதியாகியிருக்கும். ஆறுமாதக் குழந்தையாய் இருந்தபோது சாப்பிட்ட இருமல் மருந்து, இருபது வயதில் உதவாதது போலத்தான் இதுவும். ஒரு பிரச்சினைக்கு நம்வசம் உள்ள தீர்வு காலாவதியான தீர்வா, காலத்திற்கேற்ற தீர்வா என்று கண்டுகொள்வது முக்கியம்.
பழைய பிரச்சினை; புதிய தீர்வு
சில நேரங்களில் பழைய தீர்வுகள் பயன் தராதென்று தெரிந்ததுமே, புதிய தீர்வுகளை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். புதிய அணுகு முறையில் ஒன்றை அணுகுகிறபோது, அது தற் காலிகத் தீர்வாக மட்டுமில்லாமல் நிரந்தரத் தீர்வாகவும் ஆகிவிடுகிறது. சாலைகளைக் கடந்து போகிற இடத்தில் நெரிசல் ஏற்பட்டால் போக்கு வரத்துக் காவலரை நியமிப்பது தற்காலிகத் தீர்வு. பாலம் கட்டுவது நிரந்தரத் தீர்வு.
புதிய பிரச்சினை; பழைய தீர்வு
சில வேளைகளில் புதிதாக ஏற்படுகிற பிரச்சினைகளுக்கும் பழைய அனுபவங்கள் தீர்வுகளைத் தரக்கூடும். இந்த அணுகுமுறை, பெரியவர்களின் அறிவுரைகளில் வெளிப் படுவதைப் பல இடங்களில் பார்க்கலாம். படித்த படிப்பும் பயன்படுத்தும் உத்திகளும் எல்லா இடங்களிலும் தீர்வைத் தந்துவிடாது என்பதால் ஒன்றை வெவ்வேறு கோணங்களில் பார்க்கிற போது ஏதேனும் ஒரு வாசல் எப்படியோ திறக்கிறது.
புதிய பிரச்சினை; புதிய தீர்வு
புதிதாக ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு சில நேரங்களில் மிகவும் புதிய தீர்வுகளே தேவைப் படக்கூடும். இதுவரை இல்லாத சூழலில் புதிய யுகத்துக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் புதிதாகவே இருக்கலாம். ஒரு காலத்தில் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு, கணவன் கோபப்பட்டால் மனைவி பேசாமல் இருப்பது தீர்வு என்று கருதப்பட்டது. இன்று யாருக்கிடையே என்ன பிரச்சனை என்றாலும் மனம்விட்டுப் பேசுவதுதான் மிகச் சிறந்த தீர்வு என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.
எனவே, பிரச்சனையின் கோணங்கள் புதிதாக இருந்தால் புதிய கோணங்களில்தான் தீர்வுகளையும் உருவாக்க வேண்டி வரும்.
ஒரு கூழாங்கல்லைக்கூட மலையென்று கருதி, கவலைப்படுபவர்கள் தீர்வுக்கான முயற்சிகளைத் தொடங்கியபின்னர், ”இது இத்தனை பெரிதா” என்று வியந்து போகக்கூடும். மலை போன்ற பிரச்சினையை கூழாங்கல் என்று தவறாக நினைப்பவர்கள் சிரமப்படக்கூடும்.
எப்போதுமே பிரச்சினையின் வீரியத்தை விடவும், தீர்வைத் தேடுகிற வீரியம் இன்னும் பெரிதாகத்தான் இருக்கும். ஒரு காலத்தில் உயிர்க் கொல்லி நோய்களென்று கருதப்பட்டவை முற்றாக அழிக்கப்பட்டதும் அப்படித்தான். மனதில் திடமிருந்தால், நம்பிக்கை என்கிற பலமிருந்தால் எந்த மலையையும் எளிதில் நகர்த்தலாம்.

4 Responses

  1. Mohammed Ismail Khan

    Sir Do u have motivational audio in tamil ?

  2. jayaprakash

    உங்கள் எழுத்து நடை நீங்கள் பேசுவது போலவே உள்ளது .. ஸ்வரத்துடன் … நானும் மணி மேல் நிலை பள்ளி மாணவன் என்பதில் மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *