– ரிஷபாருடன்
கிரகப் பெயர்ச்சி பலன்களை நீங்கள் நம்புகிறீர்களோ! இல்லையோ! ஜாதகத்தை நம்புகிறீர்களோ இல்லையோ! உங்களுக்கு சாதகமான விஷயம் ஒன்று இதிலிருக்கிறது. கவனித்தீர்களா?
மாற்றம் என்பதுதான் செய்தியாகிறது!! நீங்கள் மாறுகிறீர்களா? உதவாத குணங்களை மாற்றிக் கொள்கிறீர்களா? உறுதியான தீர்மானங் களுக்கு மாறிக் கொள்கிறீர்களா?
கடைகளில்கூட பழையவற்றுக்கு புதியதை மாற்றிக் கொள்கிறார்கள். நீங்கள், பழைய சிந்தனைகளில் இருந்து புதிய சிந்தனைகளுக்கு மாறிக் கொள்கிறீர்களா?
பணிபுரியும் இடத்தில் சின்னச்சின்ன இட மாற்றங்கள் செய்வதன்மூலம் உங்கள் உற்சாகத்தை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
தினம் பயணம் செய்யும் பாதையில் சின்ன மாற்றம் செய்தால்கூட பயணம் சுவாரசியமான தாக மாறும்.
பழகிய பாதையிலேயே எந்திர கதியில் கால் நடைகள் போகும். காலநடைக்கேற்ற ஆக்க பூர்வமான மாற்றங்களை செய்து கொண்டே இருக்கும் போதுதான் ஏற்றங்களை எளிதில் காண முடியும்.
மாறவே கூடாது என்ற எண்ணம் உள்ளவர்கள், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வதி லிருந்து மாற்றங்களைத் தொடங்கலாமே!!
Leave a Reply