இதழ் வழியே

SMS

உங்கள் வெற்றிக்கு துணையான
குழுவை உருவாக்கும்போது……
ஜெயிக்க விரும்பும் மனிதர்களை தேடுங்கள்.
அது கடினமாக இருப்பின்
தோல்வியை வெறுக்கும் மனிதர்களை தேடுங்கள்.

நாம் பிறருடைய இன்பத்தை
எழுதும் எழுதுகோலாக இருக்கலாம்
முடியாத பட்சத்தில்
பிறருடைய துன்பத்தை அழிக்கும்
ரப்பராகவாவது இருக்கலாம்.

உங்கள் வாழ்வின் அனைத்து
நிகழ்வுகளையும் எதிர்மறையாக
மொழிபெயர்க்க பழகினால்,
நீங்கள் கடந்து போன வாழ்க்கையின்
காவலாளியாக இருக்கமாட்டீர்கள்
வருங்காலத்தின் சிற்பியாக இருப்பீர்கள்!

“வாழ்வில் நிறைவு
சாதனையில் நிறைவின்மை”
இந்த இரண்டு நிலைகள்தான்,
நாம் மேலும் உயர்வதற்கும்
நம்முள் புதைந்துள்ள திறமைகளை
வெளிக்கொணர்வதற்கும் சிறந்த வழி.

உங்களுக்கு உதவிகள் மறுக்கப்படும்போது
நினைவில் கொள்ள வேண்டிய “எயின்ஸ்டன் வரிகள்:
“எனக்கு உதவ மறுத்த அத்தனை
நபர்களுக்கும் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
அவர்களால்தான் இந்த சாதனையை என்னால்
மட்டுமே தனித்துச் செய்ய முடிந்தது”.

நாணயங்கள் சத்தமிடும்.
கரென்சி நோட்டுகள் அமைதிகாக்கும்.
உங்கள் மதிப்பு கூடும் போது
பொறுமையும், அமைதியும் உங்கள்
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

2 Responses

 1. M.J. SYED ABDULRAHMAN

  Tonic i got it
  உங்கள் மதிப்பு கூடும் போது
  பொறுமையும், அமைதியும் உங்கள்
  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
  We Self-reliance
  Thank you good wishes,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *