எடை தூக்கும் வீரன் ஒருவனிடம் அவனைப் பற்றி அவதூறாக சிலர் பேசுவதை நண்பர்கள் சொன்னார்கள். கோபமடைந்த வீரன், அவர்களைக் கொல்ல முடிவெடுத்தான். தான் செய்யப்போகும் பாவச்செயலை முன்கூட்டி மன்னிக்கும்படி தன் குருவிடம் வேண்டுகோள் விடுக்கச் சென்றான். குரு கேட்டார்… “நீ எடை தூக்கும்
வீரன் என்று இத்தனைநாள் பொய் சொல்லியிருக்கிறாய்.” அதிர்ந்த வீரனிடம், “உண்மையிலேயே நீ எடை தூக்குபவன் என்றால் சில வார்த்தைகளின் எடையைக்கூட சுமக்க முடியாதா?” என்று கேட்டார் குரு.
Leave a Reply