பாடங்கள் நடைபெறாத நிலையில் பள்ளிக்கூடங்கள் இயங்கிய போது, பிள்ளைகள் பள்ளிக்கு சென்றனர். பொதுஅறிவு சார்ந்த விஷயங்களை சொல்லித் தருமாறு ஆசிரியர்கள் பணிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி சில கிராம நூலகங்களில் பிள்ளைகளைக் காண முடிந்தது. பாடத்திட்டம் இல்லாத சூழலில் பிள்ளைகளின் இயல்பான நுண்ணறிவு வெளிப்படும் விதமாக உரையாடல்களும் உறவாடல்களும் ஆசிரியர்கள்- மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்திருக்கும்.
பாடத்திட்டங்களைத் தாண்டியும் பள்ளியில் பிள்ளைகள் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு. ஒரு மாணவர் படிக்க, பள்ளியின் முதல் பாடமே ஆசிரியர் தான். ஒருகாலத்தில், குறிப்பாக இந்தியப் பண்பாட்டில் ஆசிரியரே நடமாடும் கல்விக் கூடமாக இருந்தார். காலப்போக்கில் ஆசிரியரின் முக்கியத்துவம் பாடங்களுக்குப் போயின. பிறகு பாடநூல்களின் முக்கியத்துவம் நோட்ஸ் களுக்கும் கைடுகளுக்கும் போயின. உயிர்ப்பு மிக்க கல்விமுறை வற்றத் தொடங்கியது இங்கே தான்.
ஒருபுறம் பார்த்தால், பள்ளி நடந்தது பாடம் நடக்கவில்லை என்பது கவலைதரக்கூடிய அம்சம்தான். இன்னொருபுறம் பார்த்தால், பள்ளியில் பாடங்கள் இல்லாத நிலையில் பிள்ளைகள் என்னென்ன கற்றார்கள் என்பது முக்கியமான விஷயம். ஆசிரியர்- மாணவர் மத்தியிலான நெருக்கம் மேம்பட இந்தக் கால கட்டம் கட்டாயம் கைகொடுத்திருக்கும்.
இந்த நாட்களில் தங்கள் அனுபவம் குறித்து மாணவர்களிடம் பெற்றோர் கேட்டறிய வேண்டும். அதேபோல் ஆசிரியர்களும் மாணவ மாணவியரின் கிரகிக்கும் திறன், கலந்துரை யாடும் தன்மை, பிற தனிப்பண்புகள் தனித்திறன்கள் குறித்தெல்லாம் விரிவான குறிப்புகளைப் பதிவு செய்ய வேண்டும்.
வெவ்வேறு சூழல்களில் மாணவ மாணவியரின் ஆர்வம் இயங்கும் விதம் குறித்து கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோர் ஆய்வு செய்ய இத்தகைய வாய்ப்பு களைப் பயன்படுத்திக் கொள்வது பெரிதும் அவசியம்.
divya
good ,very good…………
v,v,v good,………………………………………….
it best,……………………………………………….