உண்டு! உண்டு!
ஒவ்வொரு தடையிலும் உண்டு, புதிய தாண்டலின் சக்தி
ஒவ்வொரு கேலியிலும் உண்டு, புதிய தூண்டலின் சக்தி
ஒவ்வொரு நிகழ்விலும் உண்டு, புதிய படிப்பினையின் சக்தி
ஒவ்வொரு செயலிலும் உண்டு, புதிய உத்திகளின் சக்தி.
உண்டு! உண்டு!
ஒவ்வொரு விதையிலும் உண்டு, ஓராயிரம் மரங்களின் ஊட்டம்
ஒவ்வொரு துளியிலும் உண்டு, நீண்ட சமுத்திரத்தின் ஊட்டம்
ஒவ்வொரு நிலையிலும் உண்டு, அடுத்த வளர்ச்சியின் ஊட்டம்
ஒவ்வொரு சவாலிலும் உண்டு, உங்கள் சரித்திரத்தின் ஊட்டம்.
உண்டு! உண்டு!
ஒவ்வொரு சிரமத்திலும் உண்டு, புதிய சிகரத்தின் வாசல்
ஒவ்வொரு முயற்சியிலும் உண்டு, புதிய சாதனையின் வாசல்
ஒவ்வொரு தொடர்பிலும் உண்டு, புதிய உறவின் வாசல்
ஒவ்வொரு கனவிலும் உண்டு, புதிய உலகத்தின் வாசல்.
உண்டு! உண்டு!
ஒவ்வொரு முடிவிலும் உண்டு புதிய தொடக்கத்தின் வாய்ப்பு
ஒவ்வொரு ஏமாற்றத்திலும் உண்டு புதிய சாதனையின் வாய்ப்பு
ஒவ்வொரு பிழையிலும் உண்டு புதிய கண்டுபிடிப்பின் வாய்ப்பு
ஒவ்வொரு பின்னடைவிலும் உண்டு புதிய முன்னேற்றத்தின் வாய்ப்பு.
உண்டு! உண்டு!
ஒவ்வொரு விரக்தியிலும் உண்டு, புதிய சக்தியின் பிறப்பு
ஒவ்வொரு வெற்றியிலும் உண்டு, புதிய வெற்றியின் திறப்பு
ஒவ்வொரு வீழ்ச்சியிலும் உண்டு, புதிய எழுச்சியின் முனைப்பு
ஒவ்வொரு துயரத்திலும் உண்டு, புதிய உறுதியின் செழிப்பு
Karthi
Nalla vaazhkai paadangalai kattrutharum padhippu