வளர்பிறைகளுக்கு விடுமுறை
பள்ளி விடுமுறைக் காலங்களுக்கு ஆக்க பூர்வமாகத் திட்டமிட மாணவர் களுக்குப் பெற்றோர்கள் உதவ வேண்டும். தங்கள் தனிப்பட்ட திறமைகளையும், கனவுகளையும் பட்டை தீட்டிக் கொள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு இது.
கோடை விடுமுறை முகாம்களில் கவனமுடன் தேர்வு செய்து குழந்தைகளை சேர்க்கலாம். சுற்றுச்சூழல் அமைப்புகள் நடத்தும் இயற்கைச் சுற்றுலாக்களில் பங்கேற்கச் செய்யலாம்.
எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் குழந்தைகளுக்கான யோகா பயிற்சி வகுப்புகளில் சேர்க்கலாம். ஜுன் மாதத்தில் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. நம் மொழியின் முக்கியத்துவம் குறித்த அறிமுகங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும் விதத்தில் எளிய- இனிய நூல்களை அறிமுகம் செய்யலாம்.
அடுத்த கல்வியாண்டின் பாடங்களை இந்த விடுமுறையிலேயே படிக்க வைக்கும் வித்தைகளைச் செய்யாமல், பொது விஷயங்களைப் பார்த்தும் படித்தும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த விடுமுறையில் குழந்தைகளுக்கு வழங்குங்கள்.
Leave a Reply