அட்டைப்படக் கட்டுரை
– பிரதாபன்
பலராலும் விரும்பப்பட 16 வழிகள்…
எப்போதும் வெற்றிபெறவேண்டும் என்றால், எல்லோராலும் விரும்பப்படுவது ரொம்ப முக்கியம். பொல்லாத மனிதர்களை மட்டுமா மற்றவர்கள் வெறுக்கிறார்கள்? தங்களுக்கு இல்லாத குணங்கள் இருப்பதாய் வெளிக்காட்ட நினைப்பவர்களையும் பலருக்கும் பிடிப்பதில்லை. தங்களுக்கு இயல்பான நல்ல
அம்சங்களை வெளிக்காட்டுவதும், நல்ல அம்சங்களையே தங்கள் இயல்பாக ஆக்கிக் கொள்வதும் வெற்றிக்கான விரைவுப் பாதைகள்.
இரண்டாவது, நாம் அங்கீகாரத்திற்கும், பாராட்டுக்கும் ஆசைப்படுவது வெளிப்படையாய் தெரியும்படி செயல்களில் இறங்குவது. இதன் காரணமாக நாம் செய்வதும் செயற்கையாக இருக்கும். இது மற்றவர்களுக்கு எளிதில் தெரிந்து விடும்.
ஒரு நல்ல செயலுக்கு, பாராட்டு எப்போதும் பக்க விளைவுதான். அதில் கிடைக்கும் மன நிறைவும், செய்து முடித்ததில் வளரும் நம்பிக்கையுமே நல்ல செயலுக்கு நேரடி விளைவுகள்.
இவையெல்லாம் உள் நிலையில் நமக்குள் வளர வேண்டிய இயல்புகள். எல்லோராலும் விரும்பப்படுபவராய் வளர்த்தெடுக்கும் தன்மைகள். அதே நேரம், வெளிச்சூழலில் நீங்கள் எல்லோராலும் விரும்பப்படுவதற்கென்று உங்கள் தோற்றத்திலும் நடவடிக்கைகளிலும் சில அம்சங்கள் அவசியம்.
உலகெங்கும், சந்திப்புகளின் போது ஒரு மனிதரிடம் என்னென்ன எதிர்பார்க்கப்படுகின்றன என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் கண்டறியப்பட்டவை உலகம் முழுமைக்கும் பொதுவானவை. இதோ அந்தப் பட்டியல்:
1. உடலில் இருந்து எழும் அதீத துர்வாசமோ அதீத நறுமணமோ பிறரை முகம் சுளிக்க வைக்கும். உடல் தூய்மையால் துர்வாசம் கட்டுப்படுத்தப்படுகிறது. மிதமான நறுமணம் கமழும் விதமாய் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தலாம்.
2. உடலுக்குப் பொருந்துகிற, கண்ணை உறுத்தாத ஆடைகள் நம்மைப்பற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.
3. விரல் நகங்கள் அளவாக வெட்டப்பட்டு தூய்மையாக இருக்க வேண்டும். கைகுலுக்கும் போதோ வணக்கம் சொல்லும்போதோ கட்டாயம் கவனிப்பார்கள்.
4. பிறரை சந்திக்கும்போது நாம் ஆரோக்கியமாக இருப்பதை அவர்கள் உணர வேண்டும். மூக்கை உறிஞ்சிக் கொண்டு, தலையைப் பிடித்துக் கொண்டு கண்கள் சிவந்திருக்க காட்சியளிப்பது பரிதாபத்தையே ஏற்படுத்தும்.
5. சுவாசப் புத்துணர்ச்சி மிக மிக முக்கியம் – ‘பளீர்’ பற்கள், துர்நாற்றமில்லாத சுவாசம் அவசியம்.
6. முதல் முதலாக யாரை சந்தித்தாலும் எழுந்து நின்று முகமன் கூறுங்கள். அவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை.
7. நின்றாலும், அமர்ந்தாலும், நடந்தாலும் நிமிர்ந்தே இருங்கள்.
8. கண்களைப் பார்த்துப் பேசுங்கள். பிறர் பேசுகிறபோதும் அவர்களின் கண்களைப் பாருங்கள்.
9. கைகுலுக்கும்போது உங்கள் உள்ளங்கைகள் உலர்ந்திருக்க வேண்டும். உள்ளங்கையில் வியர்வை ஊற்றெடுத்தால் அதை கைகுலுக்குபவரின் உள்ளங்கையில் ஒட்ட வைக்காதீர்கள்.
10. அடுத்தவருக்கும் உங்களுக்கும் நடுவே போதிய இடைவெளி இருக்கட்டும்.
11. இயல்பாகப் பேசுங்கள். மலர்ச்சியாக சிரியுங்கள்.
12. யாரைப் பார்த்தாலும் புன்னகைப்பது உங்கள் இயல்பாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்.
13. நகைச்சுவையாகப் பேசும்போது அபத்தங்கள், அசிங்கங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறரைப் புண்படுத்தும் நகைச்சுவையையும் தவிர்த்துவிடுங்கள்.
14. அமைதியாக இருங்கள். அதேநேரம் உற்சாகமாக இருங்கள்.
15. எல்லோரையும் அங்கீகரியுங்கள் – யாரையும் புறக்கணிக்காதீர்கள்.
16. உங்கள் மேல் பிரியமும் நம்பிக்கையும் உள்ளவராக நீங்கள் இருங்கள்.
இந்தப் பதினாறும் பெற்றால், பெருவாழ்வு வாழலாம்,
எல்லோராலும் விரும்பப்படுபவராக… எல்லோரையும் விரும்புபவராக…
madheena manzil
best lines nice
M.J. SYED ABDULRAHMAN
Thank you
I Ill do,
Good Wishes,
சிவஹரி
அற்புதமான வழிகள்..
பலன் தரும் யோசனைகள் 16 ஐயும் திறம்பட கடைபிடித்தாலே நம் வாழ்வும் உயர்ந்து நாமும் சமுதாயத்திலே விரும்பபடுகின்ற மனிதராகி விடுவோம்.
பகிர்ந்தமைக்கு நன்றி