கூகிள் என்றால்………….. பல இலட்சம்
பூஜ்யங்கள் கொண்ட எண் என்று பொருள்.
கழுத்தை உயர்த்தவிடாமல் கட்டினாலோ பற்றினாலோ
சேவல்களால் கூவ முடியாது.
மரணத்திற்குப் பிறகும் வளரக்கூடியவை
மனிதனின் தலைமுடியும் நகமும்தான்.
சாதாரணமாய் வாழும் மனிதர் ஒருவர் சராசரியாய்
நாளொன்றுக்கு 13 தடவைகள் மட்டுமே சிரிக்கிறாராம்!!
குதிரை வீரர்களின் சிலைகளைப் பார்த்திருப்பீர்கள். குதிரை
இருகால்களையும் உயர்த்தியிருந்தால் அவர் போரில் வீர மரணம்
அடைந்ததாகப் பொருள். ஒற்றைக் காலை உயர்த்தியிருந்தால்
காயங்களுடன், சில நாட்களுக்குப்பின் இறந்ததாய் பொருள். நான்கு
கால்களும் நிலத்தில் பதிந்திருந்தால், இயற்கை மரணம்
அடைந்ததாகப் பொருள்.
அமெரிக்காவில், பன்றிகளை வெட்டும் இடத்துக்கெதிரே
விலங்குகள் உயிர் பாதுகாவல் போராளிகள் இருவர் கோஷம்
எழுப்பிக் கொண்டிருந்தனர். இருவரும் அதே இடத்தில்
உயிரிழந்தனர். இடைவெளி வழியே தப்பித்து ஓடிவந்த
நூற்றுக்கணக்கான பன்றிகளின் பதட்டமான ஓட்டத்தில்
மிதிபட்டு இருவரும் இறந்தனர்!!
மனசுக்குப் பிடித்த காட்சியைப் பார்க்கும்போது கண்களின் கருமணிகள்
45% விரிவடைகின்றனவாம். ”வியப்பால் கண்கள் விரிந்தன” என்று
எழுத்தாளர்கள் வர்ணிப்பது, விஞ்ஞானப்பூர்வமான உண்மையாகும்!!
காதுக்கருகே சங்கு வைத்தால் கேட்பது கடலின்
இரைச்சலல்ல. காது நரம்புகளில் ஓடும் உங்கள்
ரத்தம் போடும் சத்தம் அது.
நாளொன்றுக்கு சராசரியாய் 4 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன.
1,40,000 பேர் இறக்கிறார்கள்.
தலையைத் திருப்பாமல் பின்னால் பார்க்கக்கூடிய
இரண்டே உயிரினங்கள்: கிளி, முயல். மூன்றாவது
உயிரினம் – உங்கள் மேலதிகாரி!
Leave a Reply