இரவு
வேளைகளில் தன்னை ஒரு பேய் துரத்துவது போன்ற கனவு அந்த மனிதனுக்கு அடிக்கடி வந்தது. பகலில் அந்தக் கனவைப் பற்றி நினைத்தாலே உடல் நடுங்கும். அவ்வளவு மோசமான கனவு அது. ஒருநாள் அதே கனவு. அதே பேய். இப்போது கனவில் அந்தப் பேய், அந்த மனிதனின் மிக அருகே வந்துவிட்டது. அந்த மனிதன் கேட்டான், “யார் நீ! ஏன் என்னைத் துரத்திக் கொண்டிருக்கிறாய், வஅடுத்து என்னைப் பிடித்து என்ன செய்வதாக இருக்கிறாய்?” பேய் அமைதியாகச் சொன்னது, “யாருக்குத் தெரியும்! இது உன்னுடைய கனவு. அடுத்து நான் என்ன செய்வதென்று நீதான் சொல்லவேண்டும்”. மிக மோசமான சூழல்களில்கூட இறுதி முடிவெடுக்கும் உரிமை நம்மிடம்தான் இருக்கிறது.
rasa.ganesan
nambikkaiyaana varigal : மிக மோசமான சூழல்களில்கூட இறுதி முடிவெடுக்கும் உரிமை நம்மிடம்தான் இருக்கிறது.