“ஓர் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்” என்பதை “யாரோ போட்ட பாதை” தொடர் காரண – காரியங்களோடு விளக்குவது புருவங்களை விரிய வைப்பதோடு நில்லாமல் நம்மளையும் முயற்சி செய்ய களம் அமைத்து கொடுக்கிறது.
– கே.எல். கந்தரூபி, மேலகிருஷ்ணபுதூர்.
“பின்னடைவுகளைப் பிளந்து முன்னேறுங்கள்” எனும் அட்டைப்படக் கட்டுரை ஒவ்வொரு சம்பவத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளவும் ஒரு காரியத்தில் ஏற்படும் தோல்வி சரியாகச் செயல்பட உதவும். இதற்குத் தேவையான 5 வழிகளைக் கூறியது அருமை. அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என 4 வழிகள் கூறியது சிறப்பு. தலைமைப் பண்பு சிறக்க 10 வழிகள் கூறியது நன்று. வேலை எப்போது முடியும் என்பதற்கு சோம.வள்ளியப்பன் கூறிய கருத்து தையல்காரர் துணி வெட்டும் முறையை எடுத்துக் காட்டியது நடைமுறையில் காணப்படும் உண்மை.
– தியாகராசன், இலால்குடி.
“நமது நம்பிக்கை” மாத இதழை தொடர்ந்து படித்து வருகிறோம். ஊட்டச் சத்துக்கள் மிகுந்த பானங்களை குடித்து வருகிறோம். அட்டைப் படங்களே ஈர்த்து விடுகின்றன. தலைப்புகளோ படிக்கத் தூண்டிவிடுகின்றன. நம் நம்பிக்கைகள் ஒரு நிலைப்பட்டு இயங்கி பயனடைய நமது நம்பிக்கை நல்லதொரு பயனுள்ள புத்தகம். மரபின்மைந்தன் முத்தையாவின் “அறிவு நிரந்தரம்” எனும் கவிதை அருமை.
– தமிழரசி, மதுரை.
இந்த இதழில் பிரதாபன் எழுதிய “வாழ்க்கைக்கும் உண்டு பாலன்ஸ் ஷீட்” எனும் கட்டுரையில் வந்த தகவல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. திருமதி. மகேஸ்வரி சற்குரு அவர்களின் “சாகசங்கள் நம் வசமே” எனும் கட்டுரையில் கூறிய கருத்துக்கள் அனைத்தும் பயனுள்ளவையாக இருந்தன.
– லஷ்மிநரசிம்மன், சென்னை
திட்டமிடுதல் குறித்த திரு.இரா.கோபிநாத் அவர்களின் கட்டுரையில் மாமன்னர் இராஜ ராஜன் பெரிய கோவிலைக் கட்டுவதற்கு தீட்டிய திட்டத்தைப் பற்றி அறிந்து வியந்தேன். பத்து பத்தாய் வந்த டிப்ஸ்கள் அனைத்தும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தன.
– ராஜேஷ், திண்டுக்கல்
natarajan
super