சவால் என்னும் சிறந்த வாய்ப்பு
தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நிதிநிலையிலும் உலகந்தழுவிய நிலையில் ஏற்படும் பின்னடைவுகளின் பொழுதுகளில், இந்தக் கல்வியாண்டின் நிறைவை நோக்கி நகர்கிற இலட்சக்கணக்கான மாணவர்களின் இதயங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
படித்து முடிக்கும் முன்பே பணிவாய்ப்பை வழங்குவதாய் வந்த கனவுகள் சில காகிதக் கப்பல்களாய்க் கவிழ்ந்திருக்கக் கூடும். படித்து முடித்தும் பணி வாய்ப்புக்கு விடாது முயன்ற வீரியம் பழைய பட்டதாரிகளுக்கு இருந்தது. ஒரு வகையில் அதனால் அவர்கள் முயற்சியும் வளர்ந்தது.
தேடிவரும் என்று நினைத்த வாய்ப்புகள் கைநழுவிப் போகும்போதும், முயற்சியால் தங்கள் வாழ்வைத் தாங்களே வென்றெடுக்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கிருக்கிறது. கிடைத்த வேலை வாய்ப்பைவிட இந்த சவால்தான் மிகச்சிறந்த வாய்ப்பு.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் திறமைகளை பலப்படுத்தி வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இளம் தலைமுறையை நமது நம்பிக்கை வாழ்த்தி வரவேற்கிறது.
Leave a Reply