நமது பார்வை

சம்பள உயர்வுகளின் சர்ச்சைகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வுக்கான கோரிக்கை- போராட்டம் ஆகியவை குறித்துப் பேசாத வாய்களில்லை. எழுதாத ஏடுகளில்லை.

நாடாளுமன்ற ளுறுப்பினர்களின் வருமானம் என்ன? சொத்துக் கணக்கு என்ன? என்பதெல்லாம், புலனாய்வு இதழ்களும் நிறுவனங்களும் கேட்க வேண்டிய கேள்விகள். நாடாளுமன்றம் தரும் சம்பளம் மட்டுமே அவர்களுடைய வருமானம் என்பதாக ஏற்றுக் கொண்டு பார்த்தாலும்கூட, தற்போதைய ஊதிய உயர்வும், இதர படிகளும் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கக் கூடும். அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், பொதுமக்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால் அதற்கு சில புதுமையான வழிகளை முயலலாம். அடிப்படையான சம்பளத்தொகை மற்றும் அவசியப் படிகள் மட்டும் அரசுக் கருவூலத்திலிருந்து நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படலாம். மீதமுள்ள தொகை, அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த பொதுமக்கள் குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்படலாம். அந்தக் குழு, தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆற்றும் பணிகள், நாடாளுமன்றத்தில் அவர் செயல்படும் விதங்கள் ஆகியவற்றை மதிப்பிட்டு, காலாண்டுக்கொரு முறை ஊக்கத்தொகையை அவருக்கு வழங்கலாம்.

தனியார் நிறுவனங்களில் செயல் திறனுக்கேற்ப ஊக்கத்தொகை வழங்குவது போல மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படலாம். இதன் மூலம், அரசியல்வாதிகள், தங்களை மக்கள் ஊழியர்கள் என்று சொல்வதை நிரூபிக்க அவர்களுக்கும் மக்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கியது போல் இருக்குமல்லவா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *