பொம்மைத் தொலைபேசியுடன் குழந்தை தன் கற்பனை சிநேகிதியுடன் பேசிக் கொண்டிருந்தது. மடியில் இருந்த பொம்மையை சுட்டிக்காட்டி, “இவளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அடங்கவே மாட்டேன் என்கிறாள். சமாளிக்கவே முடியவில்லை”. இந்தக் கற்பனை உரையாடலைக் கேட்ட குழந்தையின் தாய்க்கு அதிர்ச்சி. தன் சிநேகிதிகளுடன் பேசுவது குழந்தையின் மனதில் இப்படியொரு
பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது புரிந்தது. குழந்தைகள் பற்றிய நம் விமர்சனங்கள் அவர்களை சோர்வடையச் செய்கின்றன. குழந்தைகளோடு பேசும் போதும், குழந்தைகள் பற்றிப் பிறரிடம் பேசும்போதும் இந்த எச்சரிக்கை அவசியம்.
Leave a Reply