பிறர் மீது நம்பிக்கை

posted in: Namadhu Nambikkai | 0

நேர்காணல்: சிவகுருநாதன் அம்மன் T.R.Y திரு.சோமசுந்தரம் இடைவிடா முயற்சி…. தொழில் நேர்மை…. தன்மீது நம்பிக்கை…. பிறர் மீது நம்பிக்கை…. தளர்வறியா உழைப்பு இவை எல்லாம் இருந்தால் ஒரு பழைய இரும்பு வியாபாரி பல நூறு கோடிகளில் வர்த்தகம் செய்யும் அளவுக்கு இரும்பு உருக்காலைக்கு அதிபராகவும் உயர்வு அடையலாம் என்பது நிர்தசனமான உண்மை! 1998ம்ஆண்டு வரை பழைய … Continued

அறிய வேண்டிய ஆளுமைகள்

posted in: Namadhu Nambikkai | 0

– மரபின் மைந்தன் ம. முத்தையா தாதா வாஸ்வானி ஒவ்வோர் ஆண்டும் முறையாகப் படித்து முன்னேற வேண்டுமென்ற கனவுடன் தான் அந்த சிறுவனைப் பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால் பல வகுப்புகளில் தொடர்ந்து டபுள் புரமோஷன். 17 வயதிலேயே கல்லூரித் தேர்ச்சி. எம்.எஸ்.சி. படிக்கும்போது அந்த மாணவன் மேற்கொண்ட ஆய்வைத் திருத்தியவர், நோபெல் பரிசுபெற்ற மாமேதை சர்.சி.வி.இராமன். … Continued

நமக்குள்ளே

posted in: Namadhu Nambikkai | 0

ரிஷபாரூடன் அவர்கள் மிஸ்டர்.மனசாட்சியுடன் நடத்திய நேர்காணல் வெகு அருமை. தேர்ந்தெடுத்த கேள்விகள், தெளிவான பதில்கள் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் சந்தேகங்களை கையாண்ட விதம் அருமை. அரசியல் பற்றிய கேள்வியும் அதற்கான பதிலும் அற்புதம். டாக்டர் குமாரபாபு இலக்குகளை தீர்மானிக்கவும், இலக்குகளை அடைய நாம் செய்யவேண்டிய பயிற்சி பற்றியும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.

கான்பிடன்ஸ் கார்னர் – 6

நல்லவனாக வாழ்வதில் பலருக்கும் நாட்டம் குறைந்துவிட்டதே, அப்படியானால் நல்ல இயல்புகளுக்கு மதிப்பு குறைந்துவிட்டதா என்று கேட்டான் மாணவன். ஆசிரியர் சொன்னார், ”இல்லை! நல்ல அம்சங்களின் மதிப்பு கூடிவிட்டது. அரிதாகக் கிடைக்கிறதங்கத்தை தேடி வாங்குவது போல் நல்ல குணங்களை நாடிப்போக வேண்டிய வர்கள் மனிதர்கள்தான்” என்று.

கான்பிடன்ஸ் கார்னர் – 5

சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது. தம்பிக்குத் தான் அதிக சொத்து சேரவேண்டுமென அண்ணன் வாதாடினார். அண்ணனுக்குத்தான் அதிக சொத்து தர வேண்டுமென்று தம்பி வாதாடினார். தம்பி சொன்ன காரணம், ”இளமையில் நாங்கள் வறுமையில் இருந்தபோது ஆளுக்கு நான்கு ரொட்டித்துண்டுகள் கிடைக்கும்.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையிலிருந்து கற்கவேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்று வகுப்பில் ஆசிரியர் கேட்டார். கவனக் குறிப்பு, களத்தில் முடிவெடுத்தல் என்று பலரும் பல விதமான பதில்களைச் சொன்னார்கள். ஒரு மாணவன் சொன்னான், ”நூறு மீட்டர்கள் ஓடுவதற்காக, நாளொன்றுக்கு பல கிலோ மீட்டர்கள்

கான்பிடன்ஸ் கார்னர் – 1

கணிதத்தில் பெரிய நிபுணராக மட்டுமின்றி, சிறந்த பொறியாளராகவும் விளங்கியவர் ஆர்கிமிடிஸ். ஆர்வம், ஆற்றல், வாய்ப்பு மூன்றும் சிதறிக்கிடப்பதாலேயே நிகழ வேண்டிய பல சாதனைகள் நிகழ்வதில்லை என்பது அவரின் எண்ணம். சூரியக் கதிரை லென்ஸ் ஒருமுகப்படுத்தி நெருப்பை உண்டாக்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்

திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்

posted in: தொடர்கள் | 0

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அன்று இரவு முழுவதும் நான் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தேன். எனது கண்கள் தூக்கத்தை விவாக ரத்து செய்து விட்டது. மனதிற்குள் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது விழிகளை மூடி எப்படி உறங்க முடியும்? எங்கள் வீடு, ஊருக்கு வடக்கில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. … Continued

நமது பார்வை

புத்தகக் காதல் ஒவ்வொரு மனிதனுக்கும், அந்தரங்கமான நட்பாய் அன்றும் இன்றும் புத்தகங்களே இருக்கின்றன. நின்று நிதானித்து, நெறிபட உரையாட புத்தகங்கள்போல் உற்றதுணை பூமியில் இல்லை. விரும்பிய நேரத்தில் வள்ளுவரோடு, கருதிய நேரத்தில் கம்பரோடு, பிரியப்படும் போதெல்லாம் பாரதியோடு பேசி மகிழும் பெரும் வாய்ப்பு புத்தகங்கள் மூலமே கிடைக்கின்றன.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

கத்தியைக் காட்டி பணம் கேட்ட திருடனிடம் தன் மணிபர்சிலிருந்த அத்தனை பணத்தையும் தந்தார் அவர். பெருமிதத்துடன் திரும்பிய திருடனை, தோளில் தட்டிக் கூப்பிட்டார். அவருடைய கையில் துப்பாக்கி இருந்தது. அதிர்ந்துபோன இளைஞனிடம் சொன்னார், ”உன் உயிரைப் பணயம் வைத்து பணம் கேட்கிறாய் என்றால் அந்த அளவு