கான்பிடன்ஸ் கார்னர் – 2

அந்த ஆசிரியர் வித்தியாசமானவர். தன் பாடத் திட்டத்தின் அம்சங்களை நூற்றுக்கணக்கான கேள்விகளாகப் பிரித்து மாணவர்களை பதில்கள் தேடிக் கொண்டுவரச் சொல்வார். மாணவர்கள் புத்தகங்களில் புதையல் வேட்டை நடத்தி பதில்களைக் கொணர்வார்கள். புரியாத இடங்களை விளக்குவார்.

கான்பிடன்ஸ் கார்னர் – 1

பள்ளியில் மாணவர் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவன், தந்தையிடம் அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதோடு, தனக்குத் தரப்பட்டிருக்கும் அதிகாரங்கள் பற்றியும் விரிவாக விளக்கினான். ஈடுபாட்டுடன் கேட்டுக் கொண்டிருந்த தந்தை இறுதியில் சொன்னார்,

எட்டு லட்சம் கி.மீ பயணம் நமது தேசத்தின் நடமாடும் வரைபடம் H.V.குமார்

நேர்காணல் 8 லட்சம் கி.மீ பயணம் செய்தவர்… கணக்கிலடங்காத பாதைகளை வெளிக்கொணர்ந்தவர்… இந்தியாவின் அனைத்து நெடுஞ்சாலைகளும் இவருக்கு உள்ளங்கை ரேகை. லிவிங் ஜி.பி.எஸ் என்று அழைக்கப்படும் ஹெச்.வி.குமார்… நேர்காணல்களில் வழக்கமாக கேட்கப்படும் எந்த கேள்விகளையும் இவரிடம் கேட்கவே முடிவதில்லை. வாழ்க்கை குறித்தும் இவர் புரிந்திருக்கும் சாதனை குறித்தும் இவருக்கு இருக்கும் பார்வை வித்தியாசமானது. இந்தியாவின் எந்த … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 5

தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தைத் தொடத் துணிந்த வீட்டில் பூச்சியிடம் வண்ணத்துப்பூச்சி கேட்டது. இறப்பு வருமென்று தெரிந்தும் நெருப்பை தொடுகிறாயே… ஏன்?” விட்டில் சொன்னது, “வழி தெரிவதற்காகவே வெளிச்சம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். வெளிச்சத்தை சென்று சேர்வதற்கே வழிகள் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்” என்று.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

“முன்பின் அறியாத கடவுளை நான் நம்புவதில்லை” என்றார் அந்த ரயில் பயணி. அருகிலிருந்த சக பயணி, “அதனாலென்ன! நீங்கள் கடவுள் தன்மையை நம்புகிறீர்களே, அது போதும்” என்றார். நாத்திகருக்குப் புரியவில்லை. “இந்த ரயிலை இயக்குபவரை நீங்கள் முன் பின் அறிந்ததில்லை. ஆனால் பயணம் செய்கிறீர்கள்.

கான்பிடன்ஸ் கார்னர் – 3

குருவும் சீடர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். உயிரற்றவை எல்லாமே ஜடப்பொருள்கள் தானா என்ற கேள்வி எழுந்தது. சில விநாடிகள் யோசித்த குரு, “இல்லை” என்றார். ஜன்னலுக்கு அருகே வைக்கப்பட்டிருந் வீணையைக் காட்டினார். “மோதும் காற்றின் வேகத்திற்கேற்ப தந்திகள் அதிர்கின்றன.

கான்பிடன்ஸ் கார்னர் – 2

ஆணவம் மிக்க அரசன் ஒருவன், ஒரு ஞானியை சந்தித்தான்.  அவருடைய தீட்சண்யமும் எல்லோரையும் சம்மமாகப் பார்க்கும் தெளிவும் அரசனை அசௌகரியப்படுத்தியது.  “என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தெரிகிறது” என்று கேட்டான் அரசன். “ஒரு  ஞானியைப்போல் செய்வதாகய் நினைத்து, “எனக்கு உங்களைப் பார்த்தால் பன்றியைப்போல் தெரிகிறது” என்றான் அரசன். 

கான்பிடன்ஸ் கார்னர் – 1

குளத்தில் விழுந்து மிதந்த மலரொன்று அதிலிருந்த மீனிடம் கேட்டது. “சுதந்திரத்துடன் இந்தக் குளத்தில் சுற்றிச் சுற்றி நீந்துகிறாயே, உனக்கு இந்தக் குளம் நிறைய உரிமை கொடுத்திருக்கிறதா?” மீன் சொன்னது. “இந்தக் குளத்திலிருக்கும் அழுக்கையெல்லாம் நான் சுத்தம் செய்கிறேன்.

நமக்குள்ளே

“முதலடிக்கு ஏது முகூர்த்தம்” என்ற திரு.ரமணன் அவர்களது கட்டுரை மிக அருமை. தன் குழந்தை முதலடி எடுத்து வைக்கும் அழகை கண்டு, ஒரு தாய் பெறும் மகிழ்ச்சியை இந்த கட்டுரை எனக்கு தந்துவிட்டது. இசைக்கவி ரமணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கவிதா, கும்பகோணம். புத்தகம் என்ற ஒன்று நமக்கெல்லாம் பல காகிதங்களின் தொகுப்பு. ஆனால் … Continued

வேலைக்கு ஆட்கள் தேவையில்லை

காய்கறி மார்க்கெட்டில் கத்திரிக்காய் விற்கும்போது பார்த்திருக்கிறீர்களா? போட்டி போட்டுக் கொண்டு விற்பார்கள். “கிலோ இருபது ரூபாய்” என்று ஒருவர் கத்திக்கொண்டிருந்தால், எதிரில் இருப்பவர், “கிலோ பத்தொன்பது” என்று இன்னும் சத்தமாய் கத்துவார். அதுவும் நேரம் நேரம் ஆக ஆக, அடுத்த நாள் வைத்து விற்க முடியாத காய்கறியாய் இருந்தால் இன்னும் விலை குறைந்து கொண்டே இருக்கும். … Continued