மனமே உலகின் முதல் கணினி

ஒவ்வொரு சப்தத்திற்கும் தனித்துவம் உண்டு. ஒவ்வொரு சப்தத்திற்கும் அவசியமும் அர்த்தமும் உண்டு. ஒவ்வொரு சப்தமும், நமக்கும் மற்றவர்க்கும் இடையே ஒருவித தாக்கத்தை உருவாக்குவதும் உண்டு. சப்தங்கள் நமக்கும் மற்றவருக்கும் எப்போதும் ஏதோ ஒரு செய்தியை சொல்லியே செல்கிறது. இவை அனைத்தையும் நாம் விழிப்புடன் கேட்டிருக்கிறோமா?

சான் கொங்சாங்

அக்குழந்தை பிறந்தது ஏப்ரல் 7, 1954இல். இவர் பெற்றோரான சார்லஸும், லீ லீ சானும் இவருக்கு வைத்த பெயர் “சான் கொங்சாங்”. சான் பிறக்கும்போது 12 கிலோ எடையுடன் பிறந்ததால், அறுவை சிகிச்சை செய்து வெளி யெடுக்கக்கூட பணமின்றி வறுமையில் வாடிய இக்குடும்பம் நண்பர்களின் உதவியோடு இவரை பெற்றெடுத்தனர். மிகுந்த வறுமையையும் புறம் தள்ளி, “சான்”னின் … Continued

நமது பார்வை

சூழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிராய் உள்ளடங்கி ஒலித்துக் கொண்டிருந்த குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. பொன்னான கனவுகளுடன் அன்னா ஹசாரே மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டத் தொடங்கி விட்டார். அவருக்கு அதிக வேலை வைக்காமல் பொதுமக்களும் பொதுநல இயக்கங்களும் தாமாக முன்வந்து அன்னா ஹசாரே அருகே நிற்கிறார்கள்.

நமக்குள்ளே..

”சாட்சிகள் யாருமே இல்லாத உரையாடலில் என்னை நீ எப்படி நம்புகிறாய்? என்று நபிகள் கேட்டார். நபியே! இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் சொன்னீர்கள். நம்பினோம்” இந்த வரிகள் உண்மையில் எதார்த்தத்தை யோசிக்க வைக்கிற வார்த்தைகள் அழகு, வாக்கியங்களும் அழகு, அதைச் சொன்ன விதம் அழகோ அழகு.

வாங்க டீ சாப்பிடலாம்

காலை பத்தரை மணியிருக்கும். முன்னும் பின்னும் இருவர் முகம் நிறைய சிரிப்புடன் அழைத்துவர, பேண்ட் சட்டை போட்ட பலியாடு போல் அந்த பேக்கரிக்குள் அவர் அழைத்து வரப்பட்டார். “மூணு முட்டை பப்ஸ் மூணு டீ” என்று ஆர்டர் செய்த கையோடு, “சொல்லுங்ணா” என்று தொடங்கினார், முதலில் வந்த இளைஞர். “பழனிவேல் சொன்னாப்லீங் கண்ணா! நீங்க இன்வெஸ்ட் … Continued

நமக்குள்ளே..

கவிதாசன் காட்டும் திசைகளானது ஓசை இல்லாமல் பசையாக பவ்யமாக எங்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறது, விழும் போதெல்லாம் விஸ்வரூபம் எடு, நீ புண்படும்போதெல்லாம் புன்னகை செய்து கொண்டே முன்னேறு என்ற வரிகள் மிகவும் அருமை. ”சிரமங்கள் இல்லாமல் சிகரங்கள் இல்லை” என்பதை அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு நன்றி. தே.கவியரசு, தருமபுரி.

வேலைக்கு ஆட்கள் தேவையில்லை

பேப்பர் முழுக்க வேலைக்கு ஆட்கள் தேவை விளம்பரங்கள் வரும் காலத்தில், இனிவரும் நாட்களில் தலைப்பு செய்திகள் இப்படி இருக்கலாம் – எக்ஸ் நிறுவனத்திற்கு ஒரே நாளில், வேலைக்கு 20 பேர் கிடைத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த தினசரி அன்று பரபரப்பாக விற்கும். அந்த அளவிற்கு வேலைக்கு ஆட்கள் இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. நிறுவனங்கள் நடத்துகிறவர்கள் வீட்டில் இருக்கும் … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 4

1936 ஒலிம்பிக்ஸ். நீளம் தாண்டும் போட்டியில் முன்பே சாதனை படைத்திருந்த கறுப்பின வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பயிற்சிக்குப் போனார். அங்கே நாஜி இனத்தை சேர்ந்த வாட்டசாட்டமான வீரர் ஒருவரைக்கண்டு தயங்கினார்.

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்..

இந்த மாதம் ரமேஷ் பிரபா (இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள் பிரபலங்கள்) நான் எனது வாழ்க்கையில் நம்பிக்கை பெற்ற நொடிகளைப் பற்றி பேசுவதை விட மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய நொடிகளை பேசுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் எனது … Continued

கற்பனைக்கு மேனி தந்து

அதிசயங்கள் சாத்தியம் என்கிறது அடோரா மல்டிமீடியா ‘கற்பனைக்கு மேனிதந்து கால்சதங்கை போட்டுவிட்டேன்!’ என்றொரு பாடல் உண்டு. ‘கற்பனைக்கு மேனிதந்து கால்சராய்’ கூடப் போடலாம் என்று சொல்கிறது, கிராபிக்ஸ் அனிமேஷன் மல்டி மீடியா துறை. புதுமைகள் புகுந்து வருவதற்கான வாசல் களைத் திறந்து கொண்டேயிருக்கும் கிராஃபிக்ஸ் அனிமேஷன் துறையில் இன்று விரல் நுனியில் நிகழ்கின்றன வியப்பூட்டும் ஜாலங்கள்.