கேட்கத் தெரிகிறதா உங்களுக்கு?

கேளுங்கள் கொடுக்கப்படும்” மனிதகுலம் கண்ட மகத்தான வாசகங்களில் இதுவும் ஒன்று. எல்லா சமயங்களும், எல்லா கலாச்சாரங்களும், வெவ்வேறு மொழிகளில் இதையே சொல்கின்றன. பொதுவாக ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் நம்மிடமிருந்து வெளிப்படும் இயல்புகளை, வயதாக வயதாக, .உரிய பக்குவத்துடன் வளர்த்து வரும்போது அது நமக்குப் பலவகைகளில் உறுதுணையாய் இருக்கிறது.