மார்க்கெட்டிங் மந்திரங்கள்
– சினேக லதா கேள்விக்கு என்ன பதில் இன்றைய மார்க்கெட்டிங் துறையை சவால் மிக்கதும் சுவாரஸ்யம் மிக்கதுமாக ஆக்கியிருப்பது எது தெரியுமா? வாடிக்கையாளர்கள் பார்வையாளர்களாக இருந்த நிலை மாறி, வாடிக்கையாளர்கள் கண்காணிப்பாளர்களாக மாறியிருப்பதுதான். நுகர்வோர் விழிப்புணர்வு என்பது வாடிக்கையாளர்களை எதையும் எளிதில் நம்பாத நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.