வேர் தேடும் வார்த்தைகள்

– வினயா உலக மயமாகிவிட்ட சில ஆங்கிலச் சொற்களின் உண்மையான மூலம் வேறு மொழிகளில் வேர் கொண்டிருக்கும். அந்த வேர் தேடிப் பயணம் போனால் புதிய புதிய தகவல்கள் கிடைக்கின்றன! ரோமானியர்களின் தெய்வம் ஜீனோ மானடா. பல அபாயங்களை முன்கூட்டியே அறிவித்து அவர்களைக் காத்த கடவுளாகிய மானடாவின் பெயர், Moneo என்ற இலத்தீன வார்த்தையிலிருந்து வந்தது. … Continued

பேசித் தீர்க்கணுமா? எழுதிப் பார்க்கணும்!

– வினயா பல தடவை உட்கார்ந்து பேசினாலும் பிரச்சினை தீரவில்லை என்று சில விஷயங்கள் குறித்து நீங்கள் சொல்லக்கூடும். என்ன காரணம் தெரியுமா? பிறரிடம் உட்கார்ந்து பேசும் முன்னால் நீங்கள் உங்களுடன் உட்கார்ந்து பேசாததுதான்!! ஒருவர் மேடையில் தனியாகப் பேசுகிற போது பெரும்பாலும் யாரும் குறுக்கிடப் போவதில்லை. ஆனால் குறுக்கிடாத பேச்சுக்கே அவர் குறிப்புகளுடன்தான் போகிறார். … Continued

மாற்றங்களின் பலம் மகத்தானது

– வினயா சாதாரண மனிதர்களுக்கும் சாதனை மனிதர்களுக்குமான வேறுபாடுகளைப் பலரும் பலவிதமாகப் பட்டியலிடுவார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று உண்டு. நாளை செய்ய வேண்டியதை நேற்றே செய்து முடித்தவர்கள் சாதனையாளர்கள். நான்கு நாட்களுக்கு முன்னர் செய்திருக்க வேண்டியதை இன்னும் செய்யாதவர்கள் சாதாரண மனிதர்கள். ஒரு கட்டிடத்தை உருவாக்கியவர்கள் காலத்துக்கேற்ற மாற்றங்களை அவ்வப்போது செய்து வருவதன் மூலம், நிகழ்காலத்துக்கு … Continued

புள்ளிகளை இணையுங்கள் பெரும்புள்ளிகளாய் ஆவீர்கள்..

– வினயா இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் என்ற கவிஞர் எழுதிய வரிகள் இவை. ஒரு மனிதன் தன்னுடைய வட்டத்தைப் பெருக்கிக் கொண்டே போகிற போது, அவனுடைய சக்திவட்டமும் பெருகி விரிகிறது என்பதை இந்தக் கவிதை வரிகள் சொல்லாமல் சொல்கிறது. தன்னை பிரபஞ்சத்தில் ஒரு துளியாகப் பார்ப்பவர்கள் சாதாரண மனிதர்கள். தங்களை பிரபஞ்சத்தின் ஒளியாகப் பார்ப்பவர்களே சாதனை மனிதர்கள்.

கனவுகளை துறப்பதா பொறுப்புடன் இருப்பது?

– வினயா உங்கள் சட்டையை நீங்களே பிடித்து உலுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறதா? அப்படி யானால் உங்களுக்குள் உண்மையின் குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டதாக அர்த்தம். ஆயிரம் ஆயிரம் கனவுகளை ஆழ்மனம் அடைகாத்தது. உங்கள் இளமைப்பருவம் தொட்டு அந்தக் கனவுகள், முட்டைக்குள் இருக்கும் உயிர் போல முட்டி மோதிக் கொண்டிருந்தன.

திறமை மட்டும் போதாது

– வினயா எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் இருக்குமா என்ன? இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எல்லோருக்கும் ஏதாவது ஒரு திறமையாவது நிச்சயம் இருக்கும். இந்த உலகம் திறமைகளால் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால் தீவிரமுள்ள திறமைதான் ஜொலிக்கிறது.