கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1

காதலனைக் காணாமல் கலங்கினாள் அந்தப் பெண். கவலை தீர வழி கிடைக்குமென்று குருவிடம் போனாள். அவரோ அவளைப் பேச விடாமல் ஒரு பை நிறைய ஆரஞ்சுப் பழங்களைக் கொடுத்து, “இதை உடனே அந்த மலையுச்சிக்குக் கொண்டு போ” என்றார். மனச் சுமையும் கைச்சுமையும் தாங்கி மெல்ல நடை போட்டாள்.

கான்பிடன்ஸ் கார்னர் – 6

நல்லவனாக வாழ்வதில் பலருக்கும் நாட்டம் குறைந்துவிட்டதே, அப்படியானால் நல்ல இயல்புகளுக்கு மதிப்பு குறைந்துவிட்டதா என்று கேட்டான் மாணவன். ஆசிரியர் சொன்னார், ”இல்லை! நல்ல அம்சங்களின் மதிப்பு கூடிவிட்டது. அரிதாகக் கிடைக்கிறதங்கத்தை தேடி வாங்குவது போல் நல்ல குணங்களை நாடிப்போக வேண்டிய வர்கள் மனிதர்கள்தான்” என்று.

கான்பிடன்ஸ் கார்னர் – 5

சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது. தம்பிக்குத் தான் அதிக சொத்து சேரவேண்டுமென அண்ணன் வாதாடினார். அண்ணனுக்குத்தான் அதிக சொத்து தர வேண்டுமென்று தம்பி வாதாடினார். தம்பி சொன்ன காரணம், ”இளமையில் நாங்கள் வறுமையில் இருந்தபோது ஆளுக்கு நான்கு ரொட்டித்துண்டுகள் கிடைக்கும்.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

”இருபது வயது வரை என் அம்மா என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். அவர் முதுமையடைந்தவுடன் அவர் மரணம் வரை இருபது ஆண்டுகள் நான் அதை விட நான் நன்றாகப் பார்த்துக் கொண்டேன். கணக்கு நேராகி விட்டதல்லவா” என்று நபிகள் நாயகத்திடம் ஒருவர் கேட்டார். நபிகள் சொன்னார், ”கணக்கு நேராகாது. உன் அம்மா உன்னை வளர்த்தது, உன்னை

கான்பிடன்ஸ் கார்னர் – 3

பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த கூட்டத்தில், ஒரு மனிதனின் வெற்றி எதிலிருக்கிறது என்று கேட்டார் அந்த ஞானி. ”படிப்பில்” என்றார்கள் சிலர். ”பெறும் விருதுகளில்” என்றனர் சிலர். ”சேர்த்த சொத்தில்” என்றனர் சிலர். ”செய்கிற நல்ல காரியங்களில்” என்றனர் சிலர். இல்லை யென்று மறுத்த ஞானி சொன்னார், ”பெறுகிற

கான்பிடன்ஸ் கார்னர் – 2

சிறுவனாய் இருந்தபோது தன்னை மிகவும் துன்புறுத்திய தந்தை முதுமை அடைந்தார். நடுத்தர வயதை எட்டிய மகன் சொன்னார், ”அப்பா! நீங்கள் இறந்து போனால் நான் வருத்தப் படுவேனோ இல்லையா என்று தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் இறந்து போகும்வரை வருத்தப் படாமல் இருப்பீர்கள்

கான்பிடன்ஸ் கார்னர் – 1

சுதந்திரமாகவும் சுகமாகவும் 60 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த தம்பதிகள் பலரிடம், ”உங்கள் நீடித்த இல்லறத்தின் ரகசியம் என்ன?” என்று தனித்தனியே கேட்டார்கள். ”என் கணவர் எனக்காக செய்த தியாகங்கள்” என்று மனைவிமார்கள் சொன்னார்கள். ”என் மனைவி எனக்காக செய்த தியாகங்கள்” என்று கணவன்மார்கள் சொன்னார்கள்.

கான்பிடன்ஸ் கார்னர் – 6

நிகழ்காலம் முக்கியமா எதிர்காலம் முக்கியமா என்ற கேள்விக்கு தொழிலதிபர் ஒருவர், ”இரண்டுமே முக்கியம்” என்று பதிலளித்தார். ”இன்னும் விளக்கமாய் சொல்லுங்கள்” என்றார்கள், அவருடைய அலுவலர்கள். ” நான் இப்போது எப்படி இருக்கவேண்டுமென்ற

கான்பிடன்ஸ் கார்னர் – 5

கயிற்றில் போட்ட முடிச்சுக்களைக் காட்டி, ”இதை அவிழ்க்க முயலுங்கள்” என்றார் புத்தர். ”அதற்கு முன் முடிச்சு போடுவதை நான் பார்த்திருக்க வேண்டும்” என்றார் அவரது சீடர் சாரிபுத்தர். பாராட்டிய புத்தர் சொன்னார், ”ஒரு சிக்கல் ஏற்படுகிறதென்றால், அதற்குள் எப்படி மாட்டிக் கொண்டோம் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையிலிருந்து கற்கவேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்று வகுப்பில் ஆசிரியர் கேட்டார். கவனக் குறிப்பு, களத்தில் முடிவெடுத்தல் என்று பலரும் பல விதமான பதில்களைச் சொன்னார்கள். ஒரு மாணவன் சொன்னான், ”நூறு மீட்டர்கள் ஓடுவதற்காக, நாளொன்றுக்கு பல கிலோ மீட்டர்கள்