கான்பிடன்ஸ் கார்னர் – 6
வீதியில் சர்க்கரை வண்டி ஒன்று கவிழ்ந்தது. எறும்புகள் ஓடோடி வந்தன. தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் ஒவ்வொரு துகளாக சுமந்து கொண்டு தங்களால் முடிந்த சர்க்கரையை சேமித்தன. அதே இடத்திற்கு யானை ஒன்று வந்தது. அத்தனை சர்க்கரையையும் சாப்பிட ஆசை கொண்டது. தும்பிக்கையைத் தரையில் வைத்து
கான்பிடன்ஸ் கார்னர் – 5
தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?’ குரு சொன்னார், “அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்”. “என்னால் முடியவில்லையே”! “அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்”. “அதுவும் முடியவில்லையே!” “சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு
கான்பிடன்ஸ் கார்னர் – 4
“சிரமப்பட்டு நீ தேன் சேகரிக்கிறாய். ஆனால் மனிதர்கள் அதைத் திருடிச்செல்லும் போது உனக்கு வருத்தமாயில்லையா?” என்று பறவை தேனீயிடம் கேட்டது. “எனக்கு வருத்தமில்லை. மனிதர்கள் தேனைத்தான் திருடிச்செல்ல முடியும். தேனை உருவாக்கும் என் சக்தியை யாராலும் திருடிச்செல்ல முடியாது” என்றது தேனீ.
கான்பிடன்ஸ் கார்னர் – 3
எடை தூக்கும் வீரன் ஒருவனிடம் அவனைப் பற்றி அவதூறாக சிலர் பேசுவதை நண்பர்கள் சொன்னார்கள். கோபமடைந்த வீரன், அவர்களைக் கொல்ல முடிவெடுத்தான். தான் செய்யப்போகும் பாவச்செயலை முன்கூட்டி மன்னிக்கும்படி தன் குருவிடம் வேண்டுகோள் விடுக்கச் சென்றான். குரு கேட்டார்… “நீ எடை தூக்கும்
கான்பிடன்ஸ் கார்னர் – 2
தனக்குப் பெரும் துரோகம் செய்து, பிறகு மனம் வருந்திய அலுவலர் ஒருவரை, நிறுவனத்தின் தலைவர், யாரும் எதிர்பாராத விதமாக மன்னித்தார். “அது தனிப்பட்ட துரோகமே தவிர நிறுவனம் சார்ந்த துரோகமல்ல என்பதால்தான் மன்னித்தீர்களா?” என்று கேட்டபோது
கான்பிடன்ஸ் கார்னர் – 1
அந்த விருந்தில் வயதான பெண்ணொருவர் எல்லா வேலைகளையும் ஓடியாடி செய்து கொண்டிருந்தார். தன் வயதில் மற்றவர்கள் எப்படி இருப்பார்களோ அதற்கு நேர்மாறான சுறு சுறுப்புடன் செயல்பட்டார். விருந்தினர்கள் எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெண்மணியின் பேரன் நேராகவே கேட்டு விட்டான்.”ஏன் பாட்டி! உங்களுக்கு வயதே ஆகாதா?”
நாளையென்ன தேடு?
-மரபின் மைந்தன் ம. முத்தையா கோடையென்றும் குளுமையென்றும் பருவநிலை மாறும் வாடிநின்ற நிலைமையொரு வீச்சினிலே தீரும் தேடுவதை எட்டும்வரை தொடர்ந்திருக்கும் பாடு
நமக்குள்ளே
மாற்றங்களின் பலம் மகத்தானது கட்டுரை எந்த தொழிலிலும் செய்யும் புதிய சின்னச்சின்ன மாற்றங்கள் மகத்தான வெற்றியை தருகிறது என்று உணர்த்தியது. கட்டுரையின் இறுதியில், மாற்றம் வந்தால் ஏற்றம் வரும். ஏற்றமே வெற்றியைத் தரும் என்ற வரிகளைப் படித்ததும் எங்களுக்கு தேர்தல்தான் ஞாபகத்திற்கு வந்தது. ஷங்கர், கோபி மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் அறியவேண்டிய ஆளுமைகள் தொடர் அடுத்த … Continued
கிரகங்கள் மாறுகின்றன? நீங்கள்??
– ரிஷபாருடன் கிரகப் பெயர்ச்சி பலன்களை நீங்கள் நம்புகிறீர்களோ! இல்லையோ! ஜாதகத்தை நம்புகிறீர்களோ இல்லையோ! உங்களுக்கு சாதகமான விஷயம் ஒன்று இதிலிருக்கிறது. கவனித்தீர்களா? மாற்றம் என்பதுதான் செய்தியாகிறது!! நீங்கள் மாறுகிறீர்களா? உதவாத குணங்களை மாற்றிக் கொள்கிறீர்களா? உறுதியான தீர்மானங் களுக்கு மாறிக் கொள்கிறீர்களா? கடைகளில்கூட பழையவற்றுக்கு புதியதை மாற்றிக் கொள்கிறார்கள். நீங்கள், பழைய சிந்தனைகளில் இருந்து … Continued
பேசித் தீர்க்கணுமா? எழுதிப் பார்க்கணும்!
– வினயா பல தடவை உட்கார்ந்து பேசினாலும் பிரச்சினை தீரவில்லை என்று சில விஷயங்கள் குறித்து நீங்கள் சொல்லக்கூடும். என்ன காரணம் தெரியுமா? பிறரிடம் உட்கார்ந்து பேசும் முன்னால் நீங்கள் உங்களுடன் உட்கார்ந்து பேசாததுதான்!! ஒருவர் மேடையில் தனியாகப் பேசுகிற போது பெரும்பாலும் யாரும் குறுக்கிடப் போவதில்லை. ஆனால் குறுக்கிடாத பேச்சுக்கே அவர் குறிப்புகளுடன்தான் போகிறார். … Continued