வெற்றி நம் கைகளில்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் ! கதவு திறந்தால் கனவு பலிக்கும்! – கவியரசு கண்ணதாசனின் வரிகள் மிகச் சுலபமாக வெற்றி எப்படிப் பெறுவது என்று சொல்கிறது. முயற்சி, தொடர் பயிற்சி இரண்டும் கலந்து பயணிக்கையில் நம் ஆளுமைக் கதவுகள் திறக்கின்றன. ஆளுமைப் பண்பு உச்ச நிலைக்குச் செல்லும் போது வெற்றிக் கனவாக இல்லாது நனவாக … Continued
அதிக லாபம் தரும் முதலீடுகள் பாதுகாப்பானவையா?
நேர்காணல் நிதி ஆலோசகர் திரு. நல்லசாமி அவர்களுடன் நேர்முகம் நிதி ஆலோசகர்’ என்பது பெரிய பெரிய நிறுவனங்களில் உள்ள பதவி. இத்தகைய ஆலோசகர்கள் தனிமனிதர்களுக்குத் தேவையா என்ன? ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப பல்வேறு கால கட்டங்களில் தேவைகள் மாறுபடும். இதன் அடிப்படையில் அவர் தன் எதிர்கால தேவைகளை திட்டமிட வேண்டியுள்ளது. ஓர் இளைஞர் … Continued
அது வேறு இது வேறு
இப்படி சில விஷயங்களைப் பிரித்துப் பார்ப்பவரா நீங்கள்? இருங்கள் – கொஞ்சம் பேசலாம். உங்களை யாராவது புதியவருக்கு அறிமுகம் செய்கிறபோது என்னென்ன விவரங்கள் சொல்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்….. இன்னாரின் வாரிசு! இன்னாரின் வாழ்க்கைத் துணைவர்! இன்ன வேலை செய்கிறார்! இந்த விவரங்களில் உங்கள் தனி வாழ்க்கை – பொதுவாழ்க்கை – இரண்டுமே அடக்கம்.
வேலை இழக்க நேர்கிறதா?
உலகெங்கும், பொருளாதாரப் பின்னடைவின் விளைவாக பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோகிறது. குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் இந்த நிலை பெருமளவில் இருக்கிறது. ஆட்குறைப்பு, நிறுவனத்தின் உற்பத்தியோ, தொழிலோ குறைவதால் ஏற்படுகிறது. இதற்குப் பெரிய அளவில் தீர்வுகள் எதுவும் தென் படவில்லை.
வீட்டுக்குள் வெற்றி
என்ன படிக்கலாம் எப்படி ஜெயிக்கலாம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருக்கும் பத்துலட்சம் பேரும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் 8 லட்சம் பேரும் தங்கள் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கப்போகும் நேரம் இது.
இன்னொரு தடவை சொல்லுங்க!
நீங்கள் எதையாவது சொல்லி, யாராவது இப்படிக் கேட்டார்கள் என்றால், நீங்கள் உங்களைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று அர்த்தம். வேறொன்றுமில்லை. “என்ன சொன்னீங்க” என்று யாரும் கேட்டால், நீங்கள் சொன்ன விஷயம் தெளிவாகப் புரியவில்லை என்பது தெளிவாகிறது. சொல்ல விரும்பியதை சரியாகவும் சரளமாகவும் சொல்லத் தெரிந்தால்தான் வெற்றிக்கான வாசல் திறக்கும்.
சர்வம் மார்க்கெட்டிங் மயம்
வாடிக்கையாளர்களோடு நல்லுறவு விற்பனையை மேற்கொள்பவர்கள் வாடிக்கையாளர்களையும் நுகர்வோர்களையும் விற்பனைக்கு தயார் செய்வது ஒரு கலை. விற்பனை செய்யும் திறன் பிறவியிலேயே அமைவது என்பது முறியடிக்கப்பட்டு அந்தத் திறன் முற்றிலும் உருவாக்கப்படுவதாகும் என்று
தள்ளிப்போடாமல் இருப்பது எப்படி?
இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா? பொறுங்கள் – கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!! என்ன – முதலுக்கே மோசமாக இருக்கிறதா? யாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.
நினைவு நல்லது வேண்டும்
சுய நலமும் பொது நலமும் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணன் மிகச் சிறந்த தத்துவ ஞானி. அறிவும், ஆற்றலும், மக்கள் நலன் பற்றிய எண்ணமும், எளிமையும் கொண்ட தலைவர்கள் ஒரு விபத்துபோல நம் நாட்டுக்கு அவ்வப்போது அமைந்துவிடுவதுண்டு. அப்துல் கலாம் நமக்குப் பெருமை சேர்த்தாரே … Continued
சாதிக்கும் பாதையில் விவேகான்ந்த வெளிச்சம்
1. அன்பின் தன்மை விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிப் போதல். அன்புமயமானவன் வாழ்வை உணர்கிறான். அன்பில்லாதவன் வாழும்போதே சாகிறான். வாழ்வதற்கு சுவாசம் எவ்வளவு முக்கியமோ, அன்பு அவ்வளவு முக்கியம்.