ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன்
-அ. தினேஷ்குமார் பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று. நல்வாழ்வு வாழ வேண்டும் … Continued
நன்றியுடன்
-வழக்கறிஞர். த, இராமலிங்கம் குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை என்று ஒரு திரைப்படப்பாடலில் எழுதுகிறார் கண்ணதாசன். தான் ஈன்ற குட்டி களின் மீது இயல்பாக இருக்கும் பாசம் தவிர, விலங்குகளிடத்தில், மற்ற மெல்லிய உணர்வுகளைப் பார்க்க முடிவதில்லை. அப்படி ஏதேனும் கேள்விப் பட்டால், கண்டிப்பாக அது ஒரு செய்திதான்! மனிதனே, உணர்வுகளுக்கு ஆட்பட்டவன். … Continued
பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்
– கனக லஷ்மி இந்த மாதம் திரு. லேனா தமிழ்வாணன் நான் சென்னை தியாகராயர் நகர் ராமகிருஷ்ண பள்ளியில் படித்தேன். அப்போதே என் தந்தையின் பெயரால் அறியப்பட்டிருந்தேன். ஏறத்தாழ 1500 மாணவர்கள். என் பள்ளியில் இருந்த படிக்கட்டுகளை கடந்து தான் என்னுடைய வகுப்புக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு முறை மேலே ஏறுகிறபோதும் நான் பல வகுப்புகளை … Continued
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்
– தொடர் -சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வேலாயுதம் தொடுத்தார் நூலாயுதம் கனவுகளோடும் கவிதைகளோடும் விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் திரு. மு.வேலாயுதத்தைச் சந்தித்தபோது “தம்பி! வாங்க!” என்று முகத்தில் புன்னகை மின்னலிட நெஞ்சம் நிறைய வரவேற்றார். “நான் கவிதை எழுதியிருக்கிறேன். அதை உங்களிடம் காட்டுவதற்காக வந்திருக்கிறேன்” என்று கவிதை நோட்டை நீட்டினேன்.
உஷார் உள்ளே பார்
– சோம. வள்ளியப்பன் -தொடர் ஒரு அரசு நிறுவனத்தில் சக்தி வாய்ந்த பதவியில் இருந்த ஒரு நல்ல மனிதர் அவர். பொதுக் காரியங்களில் ஈடுபாடு கொண்டவர். பலருக்கும் தாரளமாக உதவியவர். பல சாதாரண பின்புலம் இல்லாத மனிதர்களுக்கும்கூட தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் கொடுத்தவர். என்ன காரணமோ தெரியவில்லை. ஒரு முறை அவரைப்பற்றி ஒரு பத்திரிகையில் யாரோ … Continued
நேற்று இன்று நாளை
– இசைக்கவி ரமணன் இதுவொரு காலம் அதுவொரு காலம் அடியில் மணலாய்க் கரைகிறதே அதுதான் உண்மைக் காலம் இரவும் பகலும் புகையென நீளும் நெஞ்சில் எங்கோ கனல்கிறதே அதுதான் உண்மையில் வாழும்! காலம் என்றால் என்ன? சென்றுவிட்ட நேற்றா? சென்று கொண்டிருக்கின்ற இன்றா? வந்து செல்லப் போகிற நாளையா? இன்று என்றால் இன்றில் எந்தப் பொழுது? … Continued
அறிய வேண்டிய ஆளுமைகள்
– மரபின் மைந்தன் ம. முத்தையா மனிதகுல வரலாற்றை மாற்றியமைத்த ஆப்பிள்கள் மூன்று. ஆதாம் ஏவாள் கண்ட ஆப்பிள். ஐசக் நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவதாக ஸ்டீவ் ஜாப்ஸ் கணினி உலகுக்குத் தந்த ஆப்பிள். கடவுளின் உலகத்தில் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் உலகத்திலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகி விட்டதுதான் ஆச்சரியம். ‘கம்ப்யூட்டர்’ என்கிற சொல்லை உச்சரிக்க … Continued
ஜவஹர்லால் நேரு – வாசிப்பில் நேசிப்பு
ஜவஹர்லால் நேரு- – வாசிப்பில் நேசிப்பு ழந்தைகளால் மட்டுமின்றி குவலயத்தாலும் பெரிதும் நேசிக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு வாசிப்பில் வல்லவராகத் திகழ்ந்தார். அவர் லிஃப்டில் பயணம் செய்த பொழுதொன்றில் மின்வெட்டு காரணமாய் லிஃப்ட் நின்று விட்டது. தொழில்நுட்பம் பெருகியிராத அந்தக் காலத்தில் கதவைத் திறக்க நேரமாகிவிட்டது. வியர்வையில் குளித்தபடி வெளியேவந்த நேரு அமைதியாகச் சொன்னாராம், “இங்கே … Continued
கல்யாணப் பரிசு
– கிருஷ்ணன் நம்பி திருமண அழைப்பிதழை பார்த்ததும் தம்பதிகளுக்கு என்ன பரிசு தரலாம் என்று யோசிப்பதுதான் வழக்கம். ஆனால் ஒருவர் தன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு, ‘என்ன பரிசு தரலாம்?’ என்று யோசித்தார். திருமண ஏற்பாடுகளும் அதைப் பற்றிய இனிய நினைவுகளுமே வருபவர்களுக்கு பரிசாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து திருமண ஏற்பாட்டில் நிறைய புதுமைகள் … Continued
வெற்றி வெளிச்சம்
– இயகோகா சுப்பிரமணியம் இருளைத் தாண்ட உறவும் நட்பும் உதவும் -தொடர் தொழில், பணி, சேவை – இந்த மூன்றின் வெற்றிக்குமே அடிப்படையான ஒரு தேவை மனித உறவு. எல்லாரிடமும் நன்றாகப் பழக வேண்டும். இனிமையாகப் பேச வேண்டும் என்பது உறவு மேம்பாட்டுக்கான நல்வழி. ஆனால் தேவையான சிலரிடம் மட்டும் நல்ல முகத்தையும், இனிமையையும், பணிவையும் … Continued