நமது நம்பிக்கை ஆசிரியருக்கு ‘தன்னம்பிக்கை நாயகர்’ விருது

நமது நம்பிக்கை மாத இதழ் ஆசிரியர் “கலைமாமணி” மரபின்மைந்தன் முத்தையா அவர்களுக்கு அனைத்திந்திய வ.உ.சி பேரவை சார்பில் “தன்னம்பிக்கை நாயகர்” என்னும் விருது 07-09-2008 அன்று வழங்கப்பட்டது. “கப்பலோட்டிய தமிழர்” தலைவர் வ.உ.சி அவர்களின் புதல்வர், வ.உ.சி.வாலேஸ்வரன் அவர்கள் இந்த விருதினை வழங்கிப் பாராட்டினார்.

தனிமனிதர்கள் வளர்ந்திட…

1. நேரந்தவறாமையைக் கடைப்பிடியுங்கள் 2. வாழ்வை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள் 3. உங்கள் வாழ்வில் யார் குறுக்கிடுகிறார்கள் என்பதை கவனமாய்ப் பாருங்கள்

நிர்வாகம் சிறந்திட

1. இரண்டாவது இடத்தில் யார் என்பதைத் தீர்மானியுங்கள் 2. தொழில் நுட்ப வளர்ச்சிகளை உணர்ந்து பின்பற்றுங்கள் 3. ஒரு ரூபாய் சம்பாதிப்பதைவிட ஒரு ரூபாய் சேமிப்பது எளிது

அறிவு நிரந்தரம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா புல்லாங் குழலில் உள்ளது வெற்றிடம் புதிய ஸ்வரங்கள் பிறந்துவிடும் கல்விக்குப் போகும் குழந்தையின் மனதில் காண்பவை எல்லாம் பதிந்துவிடும்!

பின்பற்றுதல் மனித இயல்பு

– ரிஷபாருடன் ” ஒரு தலைவர், குறிப்பிட்ட செய்தியொன்றை மக்களுக்குச் சொல்பவர் அல்ல – அவரே செய்தி” என்றார் வாரன் பென்னிஸ். “என் வாழ்வே என்னுடைய செய்தி” என்றார் காந்தியடிகள். 

வாழ்க்கைக்கும் உண்டு பாலன்ஸ் ஷீட்

– பிரதாபன் பெரிய பெரிய நிறுவனங்கள் பாலன்ஸ் ஷீட் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அவை, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம், அதன் தற்போதைய நிலை என்று பல விஷயங்களையும் வெளிப்படுத்துகின்றன. நிறுவனத்தின் பொருளாதாரத் தரத்திற்கு மட்டுமின்றி, தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதற்கும்கூட, ஒவ்வொருவரும் தங்களுக்கான பாலன்ஸ் ஷீட் உருவாக்குவது அவசியம். வாழ்வில் வளர்கிறோமா? தேய்கிறோமா? என்று … Continued

தொழிலில் வெல்ல வழிமுறைகள்! திருபாய் அம்பானியை முன்வைத்து

– சினேகலதா ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் அங்கமான “முத்ரா” விளம்பர நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகத் திகழ்ந்தவர், ஏ.ஜி.கிருஷ்ணமூர்த்தி. 1980களிலிருந்தே திருபாய் அம்பானியுடன் நெருங்கிப் பழகிய அவர், அம்பானியின் அணுகுமுறைகளை உன்னிப்பாய் கவனித்ததன் மூலம் தான் உணர்ந்த வெற்றி ரகசியங்களை “திருபாயிஸம்” என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்:

யாரோ போட்ட பாதை : வழியின் சிறப்பால் வாழ்க்கை சிறக்கும்

– தி.க. சந்திரசேகரன் அண்மையில் படித்தபின் நெஞ்சை வருடிக்கொண்டிருக்கும் வரிகளை, நீங்களும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமே!

சாகசங்கள் நம் வசமே!

– மகேஸ்வரி சர்குரு மனதாலும், உடலாலும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் பட்சத்தில் சாதனைகளும் சாத்தியம்தான்! சாகசங்கள் நம் வசம்தான்.