புதுக்கணக்கு

மரபின் மைந்தன் ம. முத்தையா

மலையைப் புரட்டும் இலட்சியத்தோடு
மனிதா தொடங்கு புதுக்கணக்கு;
விலையாய் உழைப்பைக் கொடுத்தால் போதும்
வளைந்து கொடுக்கும் விதிக்கணக்கு;

புலம்பல் ராகம் பாடுபவர்க்கு
புலரும் பொழுதுகள் புதிர்க்கணக்கு;
கிளம்பும் கதிர்போல் எழுந்தால் உனது
கிழக்கில் தினமும் ஒளிக்கணக்கு;
வாழ்வின் போக்கை விளங்கிக் கொண்டால்
வரவு வைப்பாய் புகழ்க்கணக்கு;
நோக்கம் எதுவென நன்றாய்த் தெரிந்தால்
நிச்சயம் வெல்லும் மனக்கணக்கு;
வரவு செலவாய் வெற்றி தோல்விகள்
வரட்டும், எழுது நிஜக்கணக்கு;
சரியாய் எதையும் செய்து கொண்டே வா;
ஒருநாள் வெல்லும் உன் கணக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *