கான்பிடன்ஸ் கார்னர் : 1

அந்த அரசனுக்கு 4 மனைவிகள். நான்காவது மனைவிமேல் மிகுந்த மோகம். மூன்றாவது மனைவி மீதும் இரண்டாவது மனைவி மீதும் ஏகப்பிரியம். ஆனால் முதல் மனைவியை மட்டும் சரியாக கவனிக்கவில்லை.

போதிய உணவின்றி பலவீனமாய் இருந்தாள் அவள். நாட்கள் சென்றன. அரசன் நோய் வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தான். நான்காவது மனைவியிடம், “வாழ்நாள் முழுவதும் உன்னை நேசித்தேன். நீயும் என்னுடன் வந்துவிடு” என்றான். அவள் மறுத்தாள். அரசன் அதிர்ந்தான். மூன்றாவது , இரண்டாவது மனைவியரும் மறுத்தார்கள். முதல் மனைவி மட்டும், உடன் வருவதாய் உரைத்தாள்.

நாம் எல்லோருமே அந்த அரசன் போலத்தான். நான்காவது மனைவி நம் உடல். அதற்கு எவ்வளவு அழகு சேர்த்தாலும் நம்முடன் வராது. மூன்றாவது மனைவி நம் உணர்வுகள். அவையும் ஓர் எல்லைக்குப் பிறகு மாறும். இரண்டாவது மனைவி நம் தொடர்புகள். கால மாற்றங்களுக்கு உரியவை. முதல் மனைவி நம் நல்ல காரியங்கள். அவையே நம்முடன் கூட வரும்.

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *