விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்குள் சண்டை வந்து விட்டது. ஒரு கட்டத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம், “நான்தான் நம் பெற்றோர் பெற்ற பிள்ளை. நீ தத்துப் பிள்ளை தான்!” என்றதும் அந்தக் குழந்தைக்கு முகம் வாட வில்லை.
மிகவும் பெருமிதத்தோடு, “பெற்றபிள்ளைக்கும் தத்துப் பிள்ளைக்கும் என்ன வேறுபாடு தெரியுமா? பெற்றபிள்ளை என்றால் கருப்பையில் வளர்ந்தவர்கள் என்று பொருள். தத்துப்பிள்ளை என்றால் இதயத்தில் வளர்ந்தவர்கள் என்று பொருள்.” இதைக் கேட்டதும், திட்டிய குழந்தை ஓடிவந்து கட்டிக் கொண்டது.
Leave a Reply