நமது பார்வை

வதந்தியை முடக்குங்கள்

முளைக்கும் தலைமுறை முடங்கிவிடாமல் காப்பதற்கென்று போலியோ சொட்டு மருந்து தருவதை அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்புடன் செய்து வருகின்றன.

போலியோ மருந்தால் குழந்தைகள் இறந்தன என்கிறவதந்தியின் விளைவாக பெற்றோர்கள் பதட்டமடைவது இயற்கை. அதன் விளைவாய் வெடித்த வன்முறைகளும் அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனைகளும் மருத்துவப் பரிசோதனையில் பின்னடைவை ஏற்படுத்தியதோடு சேதத்தையும் விளைவித்தன.

குரூரமான புத்தியில் குறைப்பிரசவமாகும் வதந்திகளின் பாதிப்பைப் பொதுமக்கள் உணரவேண்டும். ஊதிப் பெருக்கிய கற்பனைகள் கலவரங்களை ஏற்படுத்துவதை விழிப்புணர்வால் எதிர்கொள்ள வேண்டும்.

இயல்பான நேரங்களில் பொறுப்பாக இருப்பதைவிட பதட்டமான வேளைகளில் பொறுப்புடன் செயல்படும் பக்குவமே முக்கியம். வதந்திகளை முடக்குங்கள். போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதுணை புரியுங்கள்.

உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *