வெற்றி வாசல் 2009

-திருமதி பாரதி பாஸ்கர்

எல்லை என்பதே இல்லை

கோவைக்கு வந்து போவதென்றால் மிகுந்த சந்தோஷம் எனக்கு. ஏனென்றால், எங்கள் சென்னையில் கிடைக்காத மரியாதையான வார்த்தைகள் இங்கு கிடைக்கும். இன்னொரு கூடுதல் சந்தோஷம், பாரதியாரின் கட்டுரையொன்றை படித்த போது கிடைத்தது. அந்தக் கட்டுரையில், “தமிழ்நாட்டின் புண்ணியத் தலங்களுள் கோயம்புத்தூரும் ஒன்று” என்று பாரதியார் எழுதுகிறார். கோவையில் கோவில்கள் நிறைய இருந்தாலும், காசி, இராமேஸ்வரம் தான் புண்ணிய தலங்கள்.

கோவை எப்படி புண்ணியத்தலம் என்று எழுதுகிறார் என்று புரியவில்லை. “தமிழ்நாட்டினுடைய மாவீரர், செக்கிழுத்த செம்மல் – கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யை இந்த கோவையில்தான் வெள்ளைக்கார அரசாங்கம் சிறைவைத்தது. அப்படிப்பட்ட மாவீரரை இந்த ஊரிலே சிறையிலே இருந்திருக்கிறார் என்றால் இந்த ஊரைவிட சிறந்த புண்ணியத் தலம் வேறு எது இருக்க முடியும்!” என்று பாரதியார் எழுதிய கட்டுரையை படித்தபோது கோவைக்கான புது முகவரியாகவே தெரிந்தது.

நாம் சின்னக் குழந்தைகளாக இருந்த போதும் சரி, நாம் குழந்தைகளை வளர்க்கும் போதும் சரி, என்ன சொல்லி வளர்க்கிறோம்? “ஏய்! எல்லாத்துக்கும் ஒரு லிமிட் (Limit ) இருக்கு. ரொம்ப ஆடாதே!”. “Limit இருக்கிறது” – இதைச் சொல்லித்தான் நாம் வளர்க்கப்படுகிறோம். எல்லையே இல்லாமல் ஏதேனும் இருக்க முடியுமா?

மனிதர்களுடைய உடல் வளர்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கும் எல்லை இருக்கிறது. சில பேர் ஆறடி வளர்கிறார்கள், சில பேர் 4 அடியோடு நிற்கிறார்கள். எல்லோர்க்கும் அவரவர்க்கான ஓர் எல்லை இருக்கிறது.

உடல் வளர்ச்சிக்கு ஓர் எல்லை உண்டு. மனம் எவ்வளவு வளர வேண்டுமென்று விரும்புகிறதோ அதற்கு ஏதேனும் எல்லை இருக்க முடியுமா? மனதின் வளர்ச்சிக்கு, வாழ்க்கையில் நாம் அடைய விரும்புகிற உயரங்கள் பற்றிய கனவுகளுக்கு ஏதேனும் எல்லை இருக்க முடியுமா?

இதை தமிழ் நாட்டில் பேசுவது ரொம்பத் தேவை. பரம்பரை, பரம்பரையாக தமிழர்கள் நஹச்ங்ற்ஹ், நங்ஸ்ரீன்ழ்ண்ற்ஹ், பாதுகாப்பு இதற்குள்ளேயே எப்போதும் சிறைப்பட்டவர்கள். “அரைக்காசுன்னாலும் அரசாங்கக் காசு” அரசாங்க வேலை என்றால் Safety, Security, வருடத்திற்கு ஒருமுறை 148.50 இன்கிரிமெண்ட், பிறகு ரிட்டையர்மெண்ட். அடித்துப் பிடித்து புறநகர்ப் பகுதியில் ஒரு அரைகிரவுண்ட் வாங்கி ஒரு வீட்டைக்கட்டி, அதில் ஒரு ஈஸிசேரைப் போட்டு அமர்ந்து விட்டால் நஹச்ங் வாழ்க்கை. இதுபோன்ற மனப்பான்மையில் இருந்துவந்த காரணத்தினால்தான், “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்கிற பழமொழி. இது நமக்கெல்லாம் பிடித்த பழமொழி. மற்றவர்களைப் பற்றி, பார்த்து பொறாமைப்படக்கூடாது என்பதற்கு வந்த பழமொழியே தவிர, உங்கள் வளர்ச்சிக்கு ஓர் எல்லை இருக்கிறது என்பதற்காக வந்த பழமொழி அல்ல. .

முதல் விஷயம், “போதும்” என்று நினைக்கிற நினைப்பிலிருந்து நம்மை வெளிக்கொண்டு வருவதுதான். வீட்டில் மீன் தொட்டி வைத்திருப்பீர்கள். மீன்தொட்டியில் ரொம்ப நாள் மீன்களை விட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் அந்த மீன் தொட்டி மூன்று அடி இருந்தால், பற்பல ஆண்டுகள் இதற்குள்ளேயே நீந்திப் பழகிய மீன்கள், பற்பல ஆண்டுகள் கழித்து நீங்கள் கடலுக்குள் விட்டால் மூன்று அடிக்குள்ளேதான் நீந்தும். அதற்கு மேல் நீந்தாது. ஆனால் நாம் மனிதர்கள். மீன்களில்லை.

நாம் என்ன வேலையிலிருந்தாலும், தொழில் செய்தாலும், குடும்ப உறவுகளை வளர்ப்பவராக இருந்தாலும் இருக்கிற நிலையிலிருந்து அடுத்தடுத்து போக நினைப்பதுதான் மனித வாழ்க்கையே தவிர, இது போதும் என்று நினைப்பது இல்லை.

ரொம்ப அழகான ஒரு கவிதையைப் படித்தேன். “நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களா? நல்லது. எழுந்து நில்லுங்கள்.

நின்று கொண்டிருக்கிறீர்களா? நடக்க ஆரம்பியுங்கள். நடந்து கொண்டிருக்கிறீர்களா? தயவு செய்து ஓடுங்கள். ஓடிக் கொண்டிருக்கிறீர்களா? குதிக்க ஆரம்பியுங்கள். குதித்துக் கொண்டிருக்கிறீர்களா? பறந்து செல்லுங்கள். இந்த வானமே உங்களுடையது”

நம் நாட்டில் தொழில் முனைவோராக இருப்பது கஷ்டம். எவ்வளவு அவமானங்கள். வெற்றி என்பதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்று கேட்டால், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண், இருக்கிறாள். ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறான். கிடையாது. யார் யார் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் பாருங்கள். நீங்கள் பெற்ற வெற்றிக்குப் பின்னால் இருப்பது நீங்கள் அடைந்த அவமானங்கள். உங்களுக்கு கிடைத்த தோல்விகள், தோற்றுவிட்டு எழுந்து நடந்தீர்களே! அதுதான் உங்கள் வெற்றிக்குப் பின்னால் இருப்பது.

இதை யாரிடமிருந்து கற்றுக்கொண்டோம். நம்மிடமிருந்துதான். சின்ன வயதில் வேகமாக ஓடி “தொப்”பென்று விழுந்திருப்போம். முழங்காலில் ரத்த அடி பெற்றிருப்போம். முதலில் சுற்றிப் பார்ப்போம். ரத்தத்தை எச்சில் வைத்து துடைத்துவிட்டு திரும்ப எழுந்து ஓடுவோம். பிள்ளைகள் செய்வதுபோல இந்த வயதில், தோல்விகளின் போது நாம் செய்யப் பயின்றோமென்றால், நம்முடைய வளர்ச்சிக்கு எல்லைகளே கிடையாது.

அமெரிக்காவின் மிகப் பிரம்மாண்டமான பேஸ்பால் டீம் ஒன்று முப்பத்தியிரண்டு முறை நேஷனல் வென்றிருக்கிறது. 33வது முறை தோற்றுவிட்டார்கள். இவர்கள் தோற்றுவிட்டார்களே. டிரஸ்சிங் ரூமில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார்களே” என்று பத்திரிகையாளர்கள் பயந்து கொண்டே சென்றால், “ஒரே உற்சாகத்தோடு பார்ட்டி போல கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவரையொருவர் வாழ்த்திக் கொண்டார்கள். “என்ன நீங்கள் ஜெயித்தீர்களா? தோற்றீர்களா? என்று கேட்டதற்கு. “இப்போதுதான் தோற்றிருக்கிறோம். அடுத்தமுறை டென்ஷனில்லாமல் விளையாடலாம்” என்றார்கள்.

எல்லைகளற்ற வளர்ச்சி என்பதற்கு முதல் தேவை தோல்விகளின் போது சுருங்கிவிடாமல் இருப்பது. ஒவ்வொரு தோல்வியும் எனக்கு எவ்வளவு பெரிய பாடங்களை கற்றுத் தருகிறது என்ற சிந்தனை.

வெற்றிகளுக்குப் பின்னால் அவமானங்கள் தான் இருக்கின்றன என்று சொன்னேன். அதற்கு இந்த சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்.

இப்போது மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிற ராம்ராஜ் காட்டன் ஸ்தாபகர், முதலில் தலைச்சுமையாக வேட்டிகளை எடுத்துக் கொண்டுபோய் விற்றுவந்தவர். ஒரு கடைக்கு வழக்கமாகச் சென்று அந்த முதலாளிக்கு வணக்கம் சொல்லிவிட்டு போவார். இதற்கும் அவர் சிரிக்கக்கூட மாட்டார். வணக்கமும் சொல்லமாட்டார். ஒரு நாள் இவரைப் பார்த்ததும் கடை ஆளை அழைத்து இவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளச் சொல்லியிருக்கிறார். அதற்கு இவரோ, “சார் ஒரு நிமிஷம், நீங்கள் எனக்கு ஏதும் ஆர்டர் கொடுக்கவில்லை யென்றால்கூட பரவாயில்லை. ஆனால் உங்களுக்கு வணக்கம் செலுத்துகிற வாய்ப்பையாவது கொடுங்கள். ஏனென்றால், உங்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டுப் போனால், வியாபாரம் நன்றாக நடக்கிறது” என்றார். அதைக்கேட்ட அந்த கடை முதலாளி அழுதுவிட்டார். அப்போதே பெரிய ஆர்டர் ஒன்றைக் கொடுத்தார். அந்த வியாபார உறவு வளர்ந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் நான் படித்த அற்புதமான புத்தகம் “சுமோ”. ஜப்பானிய மல்யுத்த வீரர்கள் நினைவுக்கு வருவார்கள். மாமிச மலைபோல் உடம்பு. ஆனால் அதற்கு சம்பந்தமேயில்லாமல் முகம். கொஞ்சம் உடம்பு இருந்தால் இரண்டுபடி ஏறுவதற்குள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் இது போன்ற உடலை வைத்துக்கொண்டு உடல் தருகிற எந்த சிரமங்களையும் வெளியே காட்டாத அழகான குழந்தை முகத்தோடு இருப்பார்கள் “சுமோ” என்கிற ஜப்பானிய மல்யுத்த வீரர்கள். அவர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகம் “சுமோ” என்பதற்கு ”Shutup and Move on” என்று அர்த்தம். நம் ஒவ்வொருவரைப் பார்த்து சொல்வது போல் இருக்கிறது அல்லவா? வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற பொன்னான நேரத்தில் பெரும்பகுதியை புலம்பித் தள்ளுவதிலேயே செலவழித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களைப் பார்த்துச் சொல்வதுதான் ”Shutup and Move on”. கஷ்டமா, தோல்வியா, யாரேனும் அவமானப் படுத்திவிட்டார்கள்? பிடிக்காத விஷயம் நடந்ததா? அதைப்பற்றி நான் யாரிடமும் பேசுவதில்லை. மற்றவரிடத்திலும் இல்லை. உனக்குள்ளேகூட புலம்பிக் கொள்ளாதே! என்று அர்த்தம்.

”ஙர்ஸ்ங் ர்ய்” நகர்ந்துகொண்டேயிரு. அடுத்த வேலை வந்துவிட்டது என்று சொல்கிற அருமையான சித்தாந்தம் அது.

இந்த இரண்டையும் யார் கடைப் பிடிக்கிறார்களோ, அவர்களை மனச்சோர்வு எந்த விதத்திலும் அணுகுவதே கிடையாது. பல பேருக்கு பிரச்சனை இதுதான்.

ஒரு ஜென் கதை உண்டு. ஒரு ஜென் குரு உருளைக்கிழங்கு மூட்டை ஒன்றை சீடர்களிடம் கொடுத்தார். என்ன செய்வது என்று கேட்டதற்கு “ஒன்றும் செய்யாமல் அப்படியே வைத்திரு” என்றார் குரு. ஒரு வாரம் கழிந்தது. உருளைக்கிழங்கு மூட்டையிலிருந்து வீச்சம் வர ஆரம்பித்தது. அப்போதும் குரு, “ஒன்றும் செய்யாதே”, “அப்படியே வை” என்றார். ஒரு மாதம் கழிந்தது. நாற்றம் தாங்க முடியாமல் சீடர்கள் தவித்து குருவிடம் ஓடினார்கள். குரு “அப்படியா அதைக் கொண்டு போய் வீசிவிடுங்கள்” என்றார். உடனே சீடர்கள் ஓடிப்போய் அதை வீசிவிட்டு வந்து மகிழ்ச்சியோடு குருவின் முன் நின்றார்கள். “உருளைக்கிழங்கு மூட்டையை ஒரு மாதம் வைத்துக் கொண்டு அந்த வாடையை உன்னால் தாங்க முடியவில்லை. மனதுக்குள் எத்தனை ஆண்டு குப்பையை வைத்திருக்கிறாய். அதை எப்படி தாங்கிக் கொண்டு வாழ்கிறாய்” என்று கேட்டார்.

பாலாடைக் கட்டிகள் விற்கிற கடையில் இரண்டு எலிகள் இருந்தன. ஒரு எலிக்கு ராமு, இன்னொரு எலிக்கு சோமு என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். பாலாடைக் கட்டிகள் சாப்பிட்டு சாப்பிட்டு மிகவும் சந்தோஷமாக இருந்தன. காலை எழவேண்டியது, பாலாடைக் கட்டிகள் சாப்பிட வேண்டியது. வீட்டிற்குத் திரும்ப வேண்டியது. பாலாடைக் கட்டிகள் தீர்ந்து போனதைக்கூட அவை கவனிக்காத அளவில் செட்டில் ஆகிவிட்டன. நமக்கென்ன என்றிருந்தன. ஒரு நாள் போய்ப் பார்த்தால் கடையே காலி. ஒரு பாலாடைக் கட்டிகூட இல்லை. ராமு சொன்னது “இது நியாயமில்லை, என்னுடைய பாலாடைக்கட்டி எனக்கு கிடைக்கும்வரை போராடுவேன்” என்று. ஒவ்வொரு நாளும் ராமு கதறியது. சோமுவும் இதைத்தான் செய்தது. ஆறாவது நாள் சோமு யோசித்தது. “ஒரு மாற்றம் வந்தது. அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று ஏன் நான் யோசிக்கக்கூடாது?” என்றுவிட்டுக் அந்தக் கடையை விட்டு கிளம்பியது. பிறகு இருட்டான பாதையில் பயணித்து, சிரமப்பட்டு, அதைவிட பெரிய பாலாடைக்கட்டி கடையை கண்டுபிடித்தது. உடனே சோமு சொன்னது, “இங்கும் செட்டிலாக மாட்டேன். அடுத்த பயணத்திற்கு தயாராகவே இருப்பேன்” என்று.

கொஞ்சம் யோசித்தால் எல்லையில்லாத வெற்றிக்கான நுழைவு திறவுகோல் இந்தக் கதையில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. என்ன பிரச்சனை என்றால் மாற்றம் என்பதற்கு நாம் தயாராக ஆவது இல்லை. என்னென்ன மாற்றங்கள் வரும் என்ற யோசனை நமக்கு இல்லாத போது எல்லையில்லாத வெற்றி என்பது சாத்தியமே கிடையாது. உறவுகளில், தொழில் மூன்று மாதத்தில் என்ன நடக்கும். ஒரு வருடத்தில் என்ன நடக்கும். இந்த மாற்றங்களுக்கு நான் தயாரா? என்கிற கேள்விகளுக்குப் பதில் தெரியாதவர்கள் “எல்லையில்லாத வெற்றி என்பதை எய்தவே முடியாது.

உறவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தை 4 வயதான போது தன் தந்தையைப்பற்றி, எங்கள் அப்பா சூப்பர் அப்பா ஸ்பைடர் மேன் மாதிரி தெரியுமா? என்கிறான். அவரோ கரப்பான் பூச்சியைப் பார்த்தால்கூட மனைவியை அழைத்து அடிக்கச் சொல்லக்கூடிய ஆள். பையனைப் பொறுத்தவரையில் சூப்பர் அப்பா. பையனுக்குப் பத்து வயதாகிறபோது, “எங்கள் அப்பா நல்லவர்தான். அப்பப்ப கத்தறார்”.

பையனுக்கு பதினைந்து வயதாகிறது. அம்மாவை அழைத்து, “உன் வீட்டுக்காரருக்குச் சொல்லிவிடு. அவர் ரூட்ல கிராஸ் பண்றாரு. அவ்வளவு மரியாதையா இருக்காது” என்கிறான்.

பையனுக்கு இருபது வயதாகிறது. அம்மாவிடம் சொல்கிறான், “எப்படிம்மா இவரைக் கட்டிக் கொண்டாய். உன் அப்பாவிற்கு மூளையே இல்லையா?”

பையனுக்கு முப்பது வயதாகிறது, “நான் எது செய்தாலும் அப்பா தவறு என்கிறார். இவரைவிட வேறு வில்லனே வேண்டாம்” இப்போது அவனுக்கு நாற்பது வயதாகிறது. அவனுக்குத் திருமணமாகி குழந்தைகளும் பிறந்துவிட்டன. பையன் சொல்கிறான், “இப்போதுதான் தெரிகிறது. எங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார்” என்று. பையனுக்கு ஐம்பது வயதாகிறது. “எவ்வளவு சின்ன வருமானத்தில் எங்கப்பா என்ன சாதனை செய்திருக்கிறார்! எங்கப்பா Best என்கிறான்.

46 வருடங்கள் ஆகியிருக்கிறது. அவன் திரும்பவும் எங்கப்பா ஆங்ள்ற் என்பதற்கு. இதுதான் வாழ்வினுடைய சுழற்சி.

நாமென்ன தவறு செய்கிறோம்? பதினைந்து வயதில் இப்படித்தான் பேசுவான் என்று தெரியாமல் இருக்கிறபோது நாம் கொந்தளித்துப் போகிறோம். நானும் என்னுடைய பதினைந்து வயதில் இப்படித்தான் சொன்னேன் என்பது மறந்து போகிறது. நாம் சிறுவர்களாக இருந்தபோது மனதிற்குள் சொன்னோம். இப்போது அவர்களுக்கு சுதந்திரமிருக்கிறது. சொல்கிறார்கள்.

இந்த மாற்றத்தை யார் புரிந்து கொள்ளவில்லையோ, அவர்கள் இந்த உறவுகளே மோசம் என்று சொல்வார்கள். பசங்களெல்லாம் கெட்டுப் போய்விட்டார்கள் என்பார்கள்.

பிள்ளைகள் வளர வளர தானும் வளராத பெற்றோர்கள் நல்ல பெற்றோர்களாக இருக்க முடியாது. எல்லாம் மாறுகிறது. உறவுகள் மாறுகின்றன. உறவுகளின் பரிமாணங்கள் மாறுகின்றன.

தோல்வியால் கலங்காத தன்மை, நம்மை பாதிக்கின்ற சின்னச் சின்ன விஷயங்களுக்கு, சலித்து, முணுமுணுத்து பேசிக்கொண்டிருக்காமல், என்று அடுத்த வேலையை நோக்கிப் போகின்ற, மனோபாவம், நாளைக்கு என்ன வரும், அடுத்த நாளைக்கு என்ன வரும் என்று மாற்றங்களுக்கு முன்னே நாம் இருக்கிறோமா என்கிற சிந்தனை இவை மூன்றும் இருக்கின்றபோது வளர்ச்சி என்பதற்கு எல்லைகளே இருக்க முடியாது .

தொகுப்பு : சீனிவாசன்

  1. Senthil

    மிக அருமையான பதிவு, நன்றி 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *