வல்லமை தாராயோ!

திருச்சி 15.02.2009 வெற்றிக்கு வழிகாட்டும் விழிப்பணர்ச்சி உங்கள் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையும், உடலின் ஒவ்வோர் அசைவும் உங்கள் வாழ்வை தீர்மானிக்கிறது.

வெற்றி வாசல் 2008

-சொல்வேந்தர் சுகி. சிவம் முன்னேற விரும்புகிறவர்கள் ஒரு ரகசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் கருத்தை அநாவசியமாக எதிர்க்கிறவர்கள், கேலி பேசுகிறவர்களோடு வீணான விவாதம் செய்வதை தவிர்த்துவிட்டாலே வேகமாக முன்னேற முடியும் என்பதை வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டும். பெருவாரியான மக்கள் முன்னேற முடியாததற்கான காரணம் தங்களுடைய கருத்துக்கு எதிர்கருத்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொன்று அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் … Continued

உனக்கு நீயே ஒளியாக இரு

-டாக்டர் சுந்தர ஆவுடையப்பன் “வல்லமை தாரோயோ” திருச்சி நம்முடைய வாழ்க்கையில் எவை துன்பமாகத் தெரிகிறதோ, அவற்றை நல்லதாக எடுத்துக் கொள்வோம். பசி மனித வாழ்க்கைக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. பிரச்சனைகள் மிகவும் நல்லவை. நமக்கிருக்கக்கூடிய பகைவர்கள் அதி உன்னதமானவர்கள். நமக்கு வரக்கூடிய நோய்களும் நல்லவை.

கவிப்பேரரசு வைரமுத்து உரை

மனிதனாக இருப்பதே முக்கியம் கோயமுத்தூர் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி சங்கங்களின் மிக உயரிய விருதான (ஃபார் தி ஸேக் ஆஃப் ஹானர்) பன்முகப் பெருமாண்பு விருது, நமது நம்பிக்கை மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா அவர்களுக்கு வழங்கப்பட்டது. கோவை மணிமேல்நிலைப்பள்ளி நானி பல்கிவாலா கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பத்மஸ்ரீ … Continued

வெற்றி வாசல் 2009

-திருமதி பாரதி பாஸ்கர் எல்லை என்பதே இல்லை கோவைக்கு வந்து போவதென்றால் மிகுந்த சந்தோஷம் எனக்கு. ஏனென்றால், எங்கள் சென்னையில் கிடைக்காத மரியாதையான வார்த்தைகள் இங்கு கிடைக்கும். இன்னொரு கூடுதல் சந்தோஷம், பாரதியாரின் கட்டுரையொன்றை படித்த போது கிடைத்தது. அந்தக் கட்டுரையில், “தமிழ்நாட்டின் புண்ணியத் தலங்களுள் கோயம்புத்தூரும் ஒன்று” என்று பாரதியார் எழுதுகிறார். கோவையில் கோவில்கள் … Continued

வல்லமை தாராயோ!

நமது நம்பிக்கை மாத இதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் “வல்லமை தாராயோ” தொடர் நிகழ்ச்சி, திருச்சியில் 21.09.08 அன்று நடைபெற்றது. அதில் பேராசிரியர் முனைவர் த. ராஜாராம் எழுச்சியுரை ஆற்றினார். அவர் உரையிலிருந்து சில பகுதிகள். “தன் மனைவியிடமிருந்துகூட தனக்கான அங்கீகாரம் கிடைக்கிற நிலையிலும், பாரதி, “எத்தனை கோடி இன்பம் வைத்தாய். … Continued

வல்லமை தாராயோ : இனியொரு விதிசெய்வோம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், நமது நம்பிக்கை மாத இதழ் இணைந்து வழங்கும், வல்லமை தாராயோ தொடர் நிகழ்வு 20.07.2008 அன்று திருச்சியில் நடைபெற்றது. மனவியல் நிபுணர், மலேசிய சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் திரு. ராம். ரகுநாதன் ஆற்றிய எழுச்சியுரையிலிருந்து …