நாடாளுமன்றத் தேர்தல், வாக்காளர்களின் வலிமையைக் காட்ட மற்றொரு வாய்ப்பு. குடிமக்கள் பங்கேற்பின் முக்கிய அடையாளம், வாக்களிப்பு. தங்கள் அடிப்படை உரிமையைப் பயன்படுத்தாதவர்கள் கடமை தவறிய குற்றத்திற்கு உரியவர்கள்.
“யாருக்கு வாக்களிப்பது? எல்லோருமே ஒன்றுதான்” என்பது போன்ற புலம்பல்களால் புதிய வாழ்க்கை புலரப் போவதில்லை.
கடந்த ஐந்தாண்டுகளின் நடப்புகளை மனதில் எடைபோட்டு, சலுகைச் சம்பவங்களுக்கு சாயாமல், நடுநிலையோடு வாக்களிக்கும் ஒவ்வொரு குடிமகனும், மௌனமாய் தீர்ப்பு வழங்குகிறான்.
அந்தத் தீர்ப்பில் தெரிவது பாராட்டா அல்லது தண்டனையா என்பது வலிவாகப் பதிவாக வேண்டுமானால், வாக்களிப்பது அவசியம்.
ஒருமித்த உணர்வை, உரிமையின் பதிவை வாக்குகள் வழியே வெளிக்காட்டத் தவறாதீர்கள்.
Leave a Reply