சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் பயிலரங்கம் 17.05.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு கோவையிலுள்ள சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது. எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. எஸ்.என். சுப்ரமணியம் அவர்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்கின்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தலைவர் திரு. சௌந்தரராஜன் வரவேற்புரை வழங்கினார்.
நமது நம்பிக்கை மாத இதழில் திரு. இயகோகா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய அனுபவத் தொடர்களின் தொகுப்பான “திரைகடல் ஓடு திரவியம் தேடு” புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. மகேந்திரா பம்ப்ஸ் நிறுவனர் திரு. மகேந்திரன் ராம்தாஸ் நூலை வெளியிட இ.ட.இ. டஸ்ற். கற்க் நிறுவனர் தலைவர் திரு. ஈ. பாலசுந்தரம் பெற்றுக்கொண்டார். திரு. மகேந்திரன் ராமதாஸ், திரு. ஈ. பாலசுந்தரம், திரு. மரபின் மைந்தன் முத்தையா வாழ்த்துரை வழங்கினர் . பல அலுவல்களுக்கிடையில் மிக அருமையாக தன் தொழில் அனுபவத்தை எழுதியிருப்பதை பாராட்டினர். திரு. இயகோகா சுப்ரமணியம் ஏற்புரை வழங்கினார். தனது ஏற்புரையில் இன்றைய இளைஞர்கள் ஆன்மீக வழியைக் கடைபிடிக்க வேண்டும், நமது கலாசாரத்திற்கு மதிப்பு தரவேண்டும் என்பதை வலியுறுத்தினார். நிகழ்வின் இரண்டாம் அமர்வாக திரு. எஸ்.என் சுப்பிரமணியம் அவர்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்கின்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். அவர்தம் உரையிலிருந்து…….
சிகரம் தொட்ட, சிகரம் தொட இருக்கின்ற மனிதர்களின் மத்தியில் பேசுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் இன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் பல டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் தாளாளராக மாறியதற்குக் காரணம் எனது தாய். 10 வது படிக்கும்போது எனது தந்தையை இழந்தேன். தாயின் அரவணைப்பிலும், கடின உழைப்பிலும் வளர்ந்தேன். என்னுடைய கனவு ஆ.உ., பட்டம் பெறுவது என்று இருந்து மேன் மேலும் படித்து, உழைத்து இரண்டு டட்.ஈ முனைவர் பட்டங்கள் பெறமுடிந்தது. அதற்குக் காரணம் என்னுடைய தாயின் ஆசீர்வாதம். என்னுடைய நினைவு தெரிந்த நாளிலிருந்து காலையில் வீட்டைவிட்டு வெளியே வரும்பொழுது தாயின் காலைத் தொட்டு வணங்கிவிட்டுத்தான் வருவேன். இன்று தாய் மறைந்திருந்தாலும் அவர் தம் ஆசிர்வாதம் என்னை வாழவைத்துக் கொண்டு இருக்கிறது. மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பர். இறைவன் என தாயைச் சொல்லலாம். மாதா, பிதா, குரு, தெய்வம் மறக்காமல் இருக்க வேண்டும்.
நமக்குள் நிறைவேறாத ஆசைகள் வளர்த்துக் கொள்ளக்கூடாது. எதிர்பார்ப்புகளும் அதிகம் இருக்கக்கூடாது. எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தால் ஏமாற்றங்களும் அதிகம் ஆகும். முதலில் நம்மைப் பற்றி அறிய வேண்டும். நம் மீதான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சாதனையாளராக மாறமுடியும்.
சிலருக்கு நாம் ஐ.ப. துறையில் சென்றிருந்தால் சாதித்திருக்கலாம் எனத் தோன்றும். உண்மை அதுவல்ல! பணம் நிறைய வரும் என்பது நிஜம். பல இளைஞர்கள் நிறைய பணம் வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் இரவு விருந்து, ஆட்டம் என நம் கலாச்சாரத்தையும் சேர்த்து தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது மாறவேண்டும்.
அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு நம்நாடு. மண் வளம், மனிதவளம் நிரம்பிய நாடு. சரியாக பயன்படுத்த வேண்டும். நுண்கலைகள் 64-கையும் கற்றுத் தேறல் வேண்டும். எங்களது கல்லூரியில் வந்து உரை நிகழ்த்திய ஒரு பேச்சாளர் சொன்னார், மாணவர்களும் நாமும் ஐந்து தர்மங்களைக் கடைபிடிக்க வேண்டும். (1) இறைதர்மம் (2) பித்துரு தர்மம் (3) சக தர்மம் (4) இயற்கை தர்மம் (5) விலங்கு தர்மம். இறைவனை வணங்க வேண்டும், நம் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும், சக நண்பர்களையும், சக மனிதர்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், இயற்கையை மதிக்க வேண்டும், வாயில்லாத ஜீவராசிகளை துன்புறுத்தக்கூடாது. இவைகளை கடைப்பிடித்தால் வாழ்க்கை நெறிப்படும்.
நேர்மையுடன் இருக்க வேண்டும். ஒழுக்கம் இருக்க வேண்டும். “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்றதிருவள்ளுவரின் வாக்கு நமக்கு வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது.
உடைகளை ஒழுங்காக அணிய வேண்டும். தகவல் தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும். நேரத்தைப் பிரித்துக்கொண்டு வேலை செய்ய வேண்டும். நமக்கு மீறிய ஒரு செயல் கிடையாது எனலாம்.
கடவுளை விட பெரியது எது? சாத்தானை விட கேவலமானது எது? பணக்காரனுக்குக் கிடைக்காதது எது? ஏழைக்கு இல்லாதது எது? சாப்பிட முடியாதது எது? எல்லா கேள்விகளுக்கும் விடை ஒன்றே! சர்ற்ட்ண்ய்ஞ். ஒன்றுமே இல்லை என்பதுதான் அது. நம்மால் சாதிக்க முடியாதது என ஒன்றும் கிடையாது.
என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம். நமக்கு முன்னுதாரணம் வைத்துக்கொள்ள வேண்டும். கால அவகாசம் வைத்துக் கொள்ளவேண்டும். இத்தனை நாட்களுக்குள் சாதிப்பேன் என்றால் அந்த நாட்களுக்குள் சாதித்து முடிக்க வேண்டும். சாதிப்போம்! உழைப்போம் வெற்றி பெறுவோம்.
Leave a Reply