சிகரம் : உறுதி மட்டுமே வேண்டும்

07.09.08 ஞாயிறு அன்று கோவை குஜராத் சமாஜத்தில் உள்ள அ.த.பட்டேல் ஹாலில் “சிகரம்” பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. சோம. வள்ளிப்பன் கலந்து கொண்டார். “உறுதி மட்டுமே வேண்டும்” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையிலிருந்து…….

“உறுதி மட்டுமே வேண்டும்! உறுதி மட்டுமே இருந்தால் நமக்கான வெற்றி நம்மைத் தேடிவரும். எப்பொழுதுமே செய்து முடிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. ஆசைப்பட்டவை எல்லாம் நடந்துவிடுவதில்லை. எந்த விஷயத்தில் உறுதிப்பாட்டுடன் இருக்கிறோமோ அதுதான் நடக்கிறது. போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு 55% மட்டுமே உறுதி இருந்தால் வெல்வது கடினம். 100% வெல்வோம் என்கிற உறுதிப்பாடு இருக்கிறவர்கள் வெல்கிறார்கள். தீவிரமாக செயல்பட்டால் வெல்வது உறுதி. 20-20 கோப்பையை வென்றது தோனியின் உறுதிதான்.

எடுத்த காரியத்தில் வெற்றி பெற பகீரதப் பிரயத்தனம் இருக்க வேண்டும். உறுதிப் பாட்டுக்கும் உடல் வலிமைக்கும் சம்பந்தம் கிடையாது. மெலிந்த தேகம் கொண்ட காந்தியின் உறுதிப்பாடு அஹிம்சை என்பதாக இருந்ததால் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

கடப்பாரையால் நெகிழ்த்த முடியாத பாறையை சிறு செடியின் வேர் நெகிழ்த்திவிட்டு உள்ளே நுழைந்துவிடுகிறது. இந்தச் சாதனையை செய்யவில்லை என்றால் நான் இறந்துவிடுவேன் என்ற ஒரு உறுதிப்பாடு இருக்கும் பட்சத்தில் சாதிப்பது எளிது. நமக்கு எது முக்கியம் என்று முடிவாகிற நேரத்தில் எது முக்கியமில்லை என்பது முடிவாகிறது.

வெற்றி என்பது பணம் பதவியில் இல்லை. நம்முடைய உறுதிப்பாடு எத்தகையது என்பதில்தான் இருக்கிறது. சமுதாயக் கட்டமைப்பில் சிக்கிக் கொள்ளாமல் நம்பிக்கையுடன் செயல்படுபவர்கள்தான் வெற்றி அடைகிறார்கள். சுற்றி உள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்பது பற்றிய கவலை இருக்கக்கூடாது. பல நட்சத்திரங்களாக மாறுவதைவிட நிலவாக மாறுவதுதான் பலனும் தரும், வெளிச்சமும் தரும். பரம்பரையாக வந்த பணத்தைவிட சொந்தமாக சம்பாதிப்பதுதான் நன்றாக இருக்கும். பெற்றோர்கள் அள்ளி அள்ளி குழந்தைகளுக்கு தருவதை தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் பணம் பற்றிய தேடல் குழந்தைகளிடம் வளரும்.

எத்தனை பணம் வந்தாலும் செலவு செய்வதில் பக்குவம் வேண்டும். இன்போசிஸ் நாராயணமூர்த்தி எளிமையான வாழ்க்கை வாழ்ந்து ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும்.

அர்ப்பணிப்புத் தன்மை இருப்பது அவசியம். பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ரமேஷ் தன்னுடைய குடும்பத்தினருடன் இருக்கும் நேரத்தைவிட அறுவை சிகிச்சை அறையிலும் நோயாளிகளுடன் இருக்கும் நேரம்தான் மிக அதிகம். தான் சேர்ந்த, தனக்குப் பிடித்தமான துறையில் ஈடுபாட்டுடன் பணிபுரிகிறார். வெற்றியும் பெற்றுள்ளார்.

தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்கான தொகையை வேலைக்குச் சென்று சேர்த்து வைத்துக் கொண்டு வெற்றிகரமாக படிப்பை முடித்தார். எழுத்தாளராகவும் வென்றார். யுவர் எரோனியஸ் ஜோன்ஸ் எழுதிய ஈழ்.வெய்ன் டையர், வென்றதற்கான இரகசியம் அது. கேட்பதில் கூச்சம் கூடாது. தொடர்ந்து இயக்குநர் பாலச்சந்தரிடம் சென்று கேட்டுக்கொண்டே இருந்ததால்தான் எனது சகோதரர் வசந்த்தால் இயக்குனராக தன்னுடைய தகுதியை வெளிப்படுத்த முடிந்தது. வெல்லவும் முடிந்தது.

வெற்றிக்குத் தடை நம்முடைய எதிர்மறை மன எண்ணங்கள். அதனைத் தவிர்க்க வேண்டும். இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு சென்றால் வாழ்க்கையை வெல்வது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *